செப்டம்பர் 15 முதல் டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் பெறலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை (ஆர்.சி.புக்) டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று முதலமை…

அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை (ஆர்.சி.புக்) டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கான வசதி இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை தாங்களாகவே டிஜிட்டல் வடிவில் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நடைமுறை வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆவணங்களை இணையம் வழியாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் இந்த முயற்சியானது, பொதுமக்களின் பணிச்சுமையைக் குறைத்து நடைமுறையை எளிமையாக்க உதவும் வகையில் அமைந்துள்ளது.