ஃபோக்ஸ்வேகன் அதிரடி முடிவு: 2030-க்குள் ஒரு லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் ஆலைகள் மூடல்
ஜெர்மனியின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், தனது செயல்பாட்டுச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில் பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 2030-ஆம்…
ஜெர்மனியின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், தனது செயல்பாட்டுச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில் பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஏற்கனவே 50 ஆயிரம் பணியாளர்களை நீக்கியிருந்த நிலையில், தற்போது கூடுதலாக மேலும் 50 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அதிரடி முடிவின் ஒரு கட்டமாக, ஜெர்மனியில் உள்ள எம்டன் மற்றும் ஹனோவர் உள்ளிட்ட நான்கு முக்கிய உற்பத்தி ஆலைகளை மூட ஃபோக்ஸ்வேகன் தீர்மானித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையையே உலுக்கியுள்ள இந்த அறிவிப்பு, நிறுவனத்தின் எதிர்காலச் செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர் பணிநீக்கத்தைத் தவிர, தற்போது உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த கார் மாடல்களில் பாதியை ரத்து செய்வதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்கள், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எதிர்காலச் சிக்கன நடவடிக்கைகளாகப் பார்க்கப்படுகின்றன.