சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கம்: 35 புதிய ரயில்கள் வருகை
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் இயக்குவதற்காக 35 புதிய மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு வந்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில் இயக்குவதற்காக 35 புதிய மெட்ரோ ரயில்கள் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த ரயில்கள் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டத்தின் மிக முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகின்றன.
மொத்தம் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்படும் இந்த பிரம்மாண்ட திட்டத்தை விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கைகளை மெட்ரோ நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தலா மூன்று பெட்டிகளைக் கொண்ட 138 ரயில்களை மூன்று வெவ்வேறு தொகுப்புகளாகப் பெறுவதற்கு ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்டரின் அடிப்படையில் முதல் கட்டமாக தற்போது ரயில்கள் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த புதிய ரயில்களைப் பெறுவதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.