PulseNews
தொழில்நுட்பம்

ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது TVS iQube MillionR Special Edition இ ஸ்கூட்டர்! வாங்கலாமா?

இந்தியாவில் நாள்தோறும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக இருக்கும் வகையில் இந்த மின்சார வாகனங்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

TVS iQube MillionR Special Edition:

இந்தியாவில் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது டிவிஎஸ். இவர்களும் மின்சார வாகன தயாரிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இவர்களின் புகழ்பெற்ற மின்சார ஸ்கூட்டர் TVS iQube. இந்த இ ஸ்கூட்டரின் விற்பனை இந்தியாவில் அதிகளவு இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய சந்தையில் புதியதாக இவர்கள் அறிமுகப்படுத்தியிருப்பத TVS iQube MillionR Special Edition. பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இ ஸ்கூட்டரில் 3.5 கிலோவாட் பேட்டரி அடிப்படை வேரியண்டில் பொருத்தப்பட்டுள்ளது.

விலை எவ்ளோ?

இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 43 ஆயிரத்து 485. இதில் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு முறை சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 32 லிட்டர் முதல் 35.5 லிட்டர் வரை டிக்கி வசதி உள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 4.4 மணி நேரம் வரை ஆகிறது.

இதன் எடை 118.6 கிலோ ஆகும். முன்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. பிஎல்டிசி ஹப் மவுண்டட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இருக்கை உயரம் 770 மி.மீட்டர் ஆகும். இதன் எடை 115 கிலோ ஆகும். அதிகபட்சமாக 82 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

சிறப்புகள்:

4.2 நொடிகளில் 40 கி.மீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. கிரேடிபிளிட்டி 10 டிகிரி ஆகும். ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்ச், பின்பக்கம் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் ஹைட்ராலிக் ட்வின் ட்யூப் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

50 ஆயிரம் கி.மீட்டர் வரை பேட்டரி வாரண்டி கொண்டது. ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின், மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது TVS iQube MillionR Special Edition இ ஸ்கூட்டர்! வாங்கலாமா?
PulseNews சுருக்கம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான டிவிஎஸ், தனது பிரபலமான ஐக்யூப் (iQube) வரிசையில் 'மில்லியன்ஆர்' (MillionR) சிறப்புப் பதிப்பை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய இ-ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் 145 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. மின்சார வாகன சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய மாடல், வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology