New Toyota Innova: 23KM மைலேஜ் தரும் ஜப்பான் 7 சீட்டரில் டாப் 5 அப்க்ரேட்கள் - எப்படி இருக்கும் நியூ ஜென் MPV?

New Toyota Innova: டொயொட்டா இன்னோவா காரின் புதிய தலைமுறை மாடல் பெறப்போகும் முக்கிய மாற்றங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா..!

டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் தனது மிகவும் பிரபலமான எம்பிவி மாடலான இன்னோவாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் விரைவில் இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது; இந்த சூழலில் புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவாவிடமிருந்து நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? அது எப்படி இருக்கும்? என்பது குறித்து இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டொயோட்டா சார்பில் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள மாடல்களில் இன்னோவாவின் மேம்படுத்தப்பட்ட எடிஷன் ஒன்றாக இருக்கலாம் என்பதை, சாலை பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் உணர்த்துகின்றன. இந்த புகைப்படங்களில் இன்னோவா முழுமையாக மூடி மறைக்கப்பட்டு இருந்தாலும், நம்மால் சில மாற்றங்களை அடையாளம் காண முடிந்தது.

இன்னோவாவின் டாப் 4 அப்க்ரேட்கள்:

1. புதிய டொயோட்டா இன்னோவா எப்படி இருக்கும்?

சாலை சோத்னையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், புதிய இன்னோவாவில் பல வெளிப்புற மாற்றங்கள் இடம்பெறும் என்பதை காட்டியுள்ளன. அதன் ஒரு முக்கிய அம்சம், புதிய தேன்கூடு வடிவ க்ரில்லாக இருக்கும். அதாவது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸைப் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன், இன்னோவாவில் புதிய அலாய் வீல்கள், திருத்தப்பட்ட முன் மற்றும் பின் பம்பர்கள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்பு விளக்குகள் மற்றும் டெயில்லைட்கள் ஆகியவையும் இடம்பெறும். இருப்பினும், அதன் ஒட்டுமொத்த தோற்றம் என்பது தற்போதைய மாடலைப் போலவே தக்கவைக்கப்படும்.

2. என்னென்ன அம்சங்களை வழங்கும்?

உள்ளே, புதிய இன்னோவா தற்போதைய மாடலில் உள்ள அதே டேஷ்போர்ட் அமைப்பையே தொடரக்கூடும். ஆனால், அதில் புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம். இந்த பட்டியலில், ஹிலக்ஸில் காணப்படுவது போன்ற 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இடம்பெறலாம். அதனுடன், பின் இருக்கைகளுக்கான காற்றோட்ட வசதி, மேம்படுத்தப்பட்ட ADAS, ஹெட்-அப் டிஸ்ப்ளே, பவர்ட் கோ-ட்ரைவர் இருக்கை மற்றும் பல அம்சங்கள் இடம்பெறலாம்.

3. பவர்ட்ரெய்ன் தேர்வுகள் எப்படி?

பவர்ட்ரெய்ன் தேர்வுகள் தற்போதைய எடிஷனிலிருந்து அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. அதாவது 2.0-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் (168 bhp & 204 Nm) மற்றும் 2.0-லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் (186 bhp & 206 Nm) ஆப்ஷன்கள் உள்ளன. மற்ற வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தங்களது ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் மாடல்களை நாட்டில் வெளியிட்டுள்ள நிலையில், டொயோட்டாவும் இன்னோவா ஹைக்ராஸின் அதே எடிஷனை விரைவில் அறிமுகப்படுத்தக்கூடும். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இதுவரை இல்லை.

இதையும் படியுங்கள்: Cheapest E-SUV: குட்டி பசங்க வரோம், வழி விடுங்க..! 3 ப்ராண்ட்களின் மலிவு விலை மின்சார SUV-க்கள் - ரேஞ்ச்,அம்சங்கள்

4. புதிய இன்னோவா எப்போது அறிமுகமாகும்?

இந்த புதிய மாடலின் சரியான வெளியீட்டு தேதியை டொயோட்டா இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த மாடல் 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

4. புதிய இன்னோவா விலை எப்படி?

விலையைப் பொறுத்தவரை, இன்னோவாவின் தற்போதைய விலை ரூ. 24.12 லட்சம் முதல் ரூ. 41.05 லட்சம் வரை (ஆன்-ரோடு, சென்னை) உள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம், டொயோட்டா தனது பிரபலமான MPV-யின் விலையை உயர்த்தக்கூடும்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி ரக காரான டொயோட்டா இன்னோவாவின் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கார் 23 கிமீ மைலேஜ் தரும் திறன் கொண்டதாகவும், ஏழு இருக்கைகள் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடலில் இடம்பெறவுள்ள டாப் 5 முக்கிய மேம்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சந்தைக்கு வரவிருக்கும் இந்த புதிய தலைமுறை இன்னோவா கார், முந்தைய மாடல்களை விட நவீன வசதிகளுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.