YouTube பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையில் மாற்றம்
YouTube , தளத்தில் பதிவேற்றப்படும் நீண்ட நேர காணொளிகள், short காணொளி மற்றும் நேரலை ஒளிபரப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையை ஒரே மாதிரியாக மாற்றியுள்ளது. இந்த புதிய முறையின் கீழ், காணொளி எந்த வடிவத்தில் இருந்தாலும், அது இயக்கப்படும் ஒவ்வொரு முறையும் அல்லது மீண்டும் இயக்கப்படும் போதும் பொதுப் பார்வை எண்ணிக்கையில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு short காணொளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிப்பைத்...

யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படும் நீண்ட நேர காணொளிகள், ஷார்ட்ஸ் மற்றும் நேரலை ஒளிபரப்புகள் என அனைத்து வகை உள்ளடக்கங்களுக்கும் பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இனி அனைத்து வடிவ காணொளிகளுக்கும் பார்வைகளைக் கணக்கிடும் முறை ஒரே மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி, ஒரு காணொளி எந்த வடிவில் இருந்தாலும், அது இயக்கப்படும் ஒவ்வொரு முறையும் அல்லது மீண்டும் இயக்கப்படும் போதும் அந்தப் பார்வைகள் எண்ணிக்கை பொதுப் பார்வை எண்ணிக்கையில் சேர்க்கப்படும். கடந்த ஆண்டு ஷார்ட்ஸ் காணொளிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிப்பின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.