PulseNews
தொழில்நுட்பம்

Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?

Skoda Slavia Facelift: ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள் மற்றும் வசதிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் - விலை, புக்கிங்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மேம்படுத்தப்பட்ட டிசைன், மெருகூட்டப்பட்ட அம்சங்களின் பட்டியல் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய அப்டேடட் ஸ்லாவியா செடான் கார் மாடலை ஸ்கோடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரானது க்ளாசிக், க்ளாசிக்+, சிக்னேட்சர், ஸ்போர்ட்லைன், ப்ரெஸ்டிஜ் மற்றும் மோண்டே கார்லோ என ஆறு வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் ப்ராண்டின் டீலர்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் தொடங்கியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ விலை வரம்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போதைய எடிஷனானது ரூ.11.76 லட்சத்தில் தொடங்கி ரூ.21.72 லட்சம் வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது. இதிலிருந்து 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையிலான விலை உயர்வை புதிய எடிஷன் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா - விநியோகம், வண்ண விருப்பங்கள்

வாடிக்கையாளர்கள் சிம்லா கிரீன், பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், ஸ்டீல் கிரே, லாவா ப்ளூ, செர்ரி ரெட் மற்றும் டீப் பிளாக் என ஏறிகனவே உள்ள 8 வண்ணங்களில் தங்களுக்கான காரை முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதலாக ஆர்டிக் சில்வர், கேப்புச்சினோ பீஜ் ஆகிய இரண்டு வண்ண ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறத்திலான கார்களை முன்பதிவு செய்பவர்களுக்கான விநியோகம் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது ஹுண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா - புதுசா என்ன இருக்கு?

மேம்படுத்தப்பட்ட ஸ்லாவியாவானது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்பு விளக்கு மற்றும் டெயில் லேம்ப் யூனிட், புதிய முன் மற்றும் பின்புற பம்பர்கள், திருத்தப்பட்ட ஃபாக் லேம்ப், புதிய அலாய் வீல்கள் மற்றும் க்ரில் மூலமாக புத்துயிரூட்டப்பட்ட டிசைனை கொண்டுள்ளது. மற்றபடி தனது வெளிப்புற தோற்றத்தை ஸ்லாவியா அப்படியே தக்கவைத்துள்ளது. உட்புறத்தில் ஸ்லாவியா ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. அதில், பழைய சிறிய ஸ்க்ரீன்கள் அகற்றப்பட்டு தற்போது பெரிய 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்க்ரீன், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் 360 டிகிரி கேமரா, பவர்ட் மற்றும் வெண்டிலேடட் இருக்கைகள், சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் பின்புற மசாஜ் இருக்கைகள் உள்ளிட்டவை புதியதாக இணைக்கப்பட்டுள்ளன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தற்போது கூகுள் க்ளவுட் மூலம் இயங்கும் இன்டக்ரேடட் செயற்கை நுண்ணறிவு அசிஸ்டண்டை ஒருங்கிணைத்துள்ளது

இதையும் படியுங்கள்: Long Trip Cars: ரோட் ட்ரிப் போக விரும்புபவரா? நீங்க தேர்வு செய்ய வேண்டிய டாப் 5 SUV மாடல்கள் - ஏன்? எதற்கு?

ஸ்கோடா ஸ்லாவியா - 8 ஸ்பீட் AT ட்ரான்ஸ்மிஷன்

மெக்கானிக்கல் அம்சங்கள் அடிப்படையில், ஸ்லாவியா தனது 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் (114 bhp & 178 Nm) மற்றும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் (148 bhp & 250 Nm) இன்ஜின்களின் பயன்பாட்டை தொடர்கிறது. அதேநேரம் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் 6 ஸ்பீட் TC கியர்பாக்ஸிற்குப் பதிலாக 8 ஸ்பீட் TC கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் உள்ள கார்களில் இத்தகைய வசதியை பெறும் முதல் கார் ஸ்லாவியா தான் என ஸ்கோடா பெருமிதம் தெரிவித்துள்ளது. அதே நேரம் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் தொடர்கிறது. 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 7 ஸ்பீட் DSG கியர்பாக்ஸ் தேர்வுடன் வருகிறது.

ஸ்கோடா ஸ்லாவியா பாதுகாப்பு அம்சங்கள்:

பாதுகாப்பு அடிப்படையில் இந்த காரின் அனைத்து ட்ரிம்களிலும் 6 ஏர்பேக்குகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ள அமைப்புடன்,புதிய 360-டிகிரி ஏரியா வியூ கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. கேமரா வசதிகள் மாடல்களுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. சிக்னேச்சர் மாடலில் ரிவர்ஸ்-வியூ கேமராவும், ஸ்போர்ட்லைன், ப்ரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ மாடல்களில் முழுமையான 360-டிகிரி ஏரியா வியூ சிஸ்டமும் கிடைக்கின்றன. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவரின் பாதுகாப்பு பரிசோதனையிலும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

ஸ்கோடாவின் சூப்பர் கேர் திட்டத்தின் மூலம் உரிமையாளர்கள் 4 ஆண்டுகள் அல்லது 100,000 கி.மீ. (இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை) வாரண்டியையும், தொழிலாளர் கட்டணத்தை மட்டும் செலுத்தி திட்டமிடப்பட்ட நான்கு இலவச சர்வீஸ்களையும் பெறலாம். மேலும், 190-க்கும் மேற்பட்ட நகரங்களில் சான்றளிக்கப்பட்ட சர்வீஸ் செண்டர்கள் மற்றும் அசல் உதிரி பாகங்களின் ஆதரவுடன், சாலையோர உதவியும் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
PulseNews சுருக்கம்

இந்திய வாகனச் சந்தையில் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, கூடுதல் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நவீன அம்சங்களுடன் புதிய ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி, மசாஜ் செய்யும் வசதி கொண்ட இருக்கைகள், செயற்கை நுண்ணறிவு (AI) அசிஸ்ட் மற்றும் பெரிய அளவிலான திரை வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்லாவியா காரின் விலை மற்றும் முன்பதிவு குறித்த விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காரானது க்ளாசிக் மற்றும் க்ளாசிக்+ போன்ற பல்வேறு வேரியண்டுகளில் சந்தைக்கு வந்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology