ஒரே சார்ஜில் 301 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது ஓலாவின் OLA S1Z இ ஸ்கூட்டர்!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் ஸ்கூட்டர்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் மிகவும் பிரபலமான நிறுவனமாக திகழ்வது ஓலா.

Ola S1Z:

ஓலா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இ ஸ்கூட்டர் ola s சீரிஸ் இ ஸ்கூட்டர்கள். இந்த வரிசையில் புதியதாக அறிமுகமாகியிருக்கும் இ ஸ்கூட்டர் Ola S1Z இ ஸ்கூட்டர் ஆகும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஒரே சார்ஜில் 301 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த புதிய Ola S1Z இ ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட். மற்றொன்று 5.1 கிலோவாட் பொருத்தப்பட்ட வேரியண்ட் ஆகும். இதில் 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் ஒரே சார்ஜில் 179 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 5.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 301 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

சிறப்புகள்:

இந்த புதிய Ola S1Z இ ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பம்சங்களை ஓலா நிறுவனம் வடிவமைத்துள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், அட்வான்ஸ் ரெஜினெரெட்டிவ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. வாகன ஓட்டி வழி தெரியாமல் சிரமப்படாமல் இருப்பதற்காக ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஜியோ, டைம் ஆகிய மோட்களில் இந்த Ola S1Z இ ஸ்கூட்டரில் உள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த Ola S1Z இ ஸ்கூட்டரில் 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் வரும் டிசம்பர் மாதம் முதல் டெலிவரிக்கு கிடைக்கும். 5.1 கிலோவாட் பொருத்தப்பட்ட வேரியண் அடுத்தாண்டு மார்ச் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இதில் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. வெள்ளை, நீலளம், பச்சை வண்ணங்களில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது.

விலை என்ன?

இந்த Ola S1Z இ ஸ்கூட்டரில் 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் ரூபாய் 79 ஆயிரத்து 999க்கும் (எக்ஸ் ஷோரூம்), 5.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் ரூபாய் 99 ஆயிரத்த்து 999-க்கும் ( எக்ஸ் ஷோரூம்) விற்கப்படுகிறது.

வசதிகள்:

வழக்கமான ஓலாவின் Ola S சீரிஸ் வரிசையிலே இந்த இ ஸ்கூட்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் வேகமும், வண்ணமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிக்கி வசதியும் வழக்கமான ஓலா இ ஸ்கூட்டர் அளவிற்கு அதிக இட வசதி கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று ஓலா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இந்திய மின்சார வாகன சந்தையில் ஓலா நிறுவனம் தனது புதிய OLA S1Z மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபலமாக உள்ள ஓலா எஸ் (S) சீரிஸ் வரிசையில் இணைந்துள்ள இந்த புதிய மாடல், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் 301 கிலோமீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்கும் திறனை கொண்டுள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு அதிகரித்து வரும் வரவேற்பை கருத்தில் கொண்டு, ஓலா நிறுவனம் இந்த அதிநவீன தயாரிப்பை களமிறக்கியுள்ளது.