PulseNews
தொழில்நுட்பம்

டெல்லி - சென்னை ரயில் பயணம் இனி ஈஸி: காசிப்பேட்டை - பல்ஹார்ஷா 3வது பாதையை திறந்தது ரயில்வே

ரயில்வே அமைச்சகம் காசிப்பேட்டை - பல்ஹார்ஷா (Kazipet - Balharshah) இடையிலான 3-வது ரயில் பாதை திட்டத்தைப் பணிகளைப் பூர்த்தி செய்து இயங்க வைத்துள்ளதன் மூலம், டெல்லி - சென்னை வழித்தடத்திலான ரயில் போக்குவரத்து கணிசமாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் இந்த 203 கி.மீ நீள திட்டம் சுமார் ரூ.3,000 கோடி செலவில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. தெற்கு மத்திய ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.ஸ்ரீதர் தெரிவித்துள்ளபடி, வட இந்தியாவையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் மிக முக்கியமான ரயில் பாதையாகக் காசிப்பேட்டை - பல்ஹார்ஷா பகுதி திகழ்கிறது. ஆசிஃபாபாத் மற்றும் சிர்பூர் காகஸ்நகர் இடையிலான கடைசி 11 கி.மீ தூரப் பாதையும், பிப்ரா ஆற்றின் (Bibra River) மீதான முக்கியப் பாலத்தின் கட்டுமானமும் 2026 ஜூலை 22 அன்று பூர்த்தியடைந்ததை அடுத்து, முழுத் திட்டப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க காசிப்பேட்டை - பல்ஹார்ஷா 3-வது ரயில் பாதை திட்டம்: பயணிகள் ரயில் சேவை தவிர, காசிப்பேட்டை - பல்ஹார்ஷா பிரிவு சரக்கு போக்குவரத்திற்கும் மிக முக்கியமான பாதையாகும். இந்தப் பாதையின் ஓரத்தில் அமைந்துள்ள பல நிலக்கரி மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கான இணைப்பு பாதைகளை இது இணைக்கிறது. காசிப்பேட்டை - பல்ஹார்ஷா இடையிலான ரயில் பாதையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், இந்தப் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெருக்கடியை குறைக்க, முதற்கட்டமாக ராகவபுரம் - மந்தமர்ரி இடையே 33 கி.மீ தூரத்திற்கான 3-வது பாதை பணிகள் 2016-ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டன. போக்குவரத்தை மேலும் எளிதாக்க, காசிப்பேட்டை - பல்ஹார்ஷா பிரிவில் மீதமுள்ள 203 கி.மீ (தெலங்கானா - 159 கி.மீ மற்றும் மகாராஷ்டிரா - 44 கி.மீ) பாதையில் 3-வது பாதை அமைத்தல் மற்றும் மின்மயமாக்கல் பணிகளுக்கு 2015-16 நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது முழு காசிப்பேட்டை - பல்ஹார்ஷா பிரிவும் 3 வழிகளாக மாற்றப்பட்டு மின்மயமாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் பல்ஹார்ஷா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள மிகச்சிறிய பகுதி மட்டுமே இன்னும் இணைய வேண்டியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட 3-வது பாதையைப் பல்ஹார்ஷா ரயில் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2020-ஆம் ஆண்டு முதல் கட்டம் கட்டமாக முடிக்கப்பட்டு வந்த இந்தப் பணி தற்போது முழுமையடைந்துள்ளது. இது தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் ரயில்வே உள்கட்டமைப்புக்கு மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளது என்றும் அவர் கூறினார். திட்டத்தின் 5 முக்கிய நன்மைகள்: நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் 'கிராண்ட் ட்ரங்க்' முதன்மை வழித்தடத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் தடையற்ற போக்குவரத்திற்கு வழிவகுக்கிறது. ரயில்களின் வேகம் மற்றும் இயக்கத்தை அதிகரித்து, பொதுமக்களின் ரயில் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. ரயில் பாதையில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கிறது; அனல் மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலக்கரி, சிமெண்ட் போன்ற மூலப்பொருட்களின் போக்குவரத்தைச் சீராக்குகிறது. இந்த வழித்தடத்தில் இயங்கும் பயணிகள் ரயில்களின் சேவையை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. மின்மயமாக்கல் பணிகள் மூலம் எரிபொருள் செலவு குறைக்கப்பட்டு, கார்பன் உமிழ்வு தடுக்கப்படுவதால் இயற்கை பாதுகாக்கப்படுகிறது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology