Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்

Upcoming Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 3 வலுவான ஹைப்ரிட் எஸ்யுவியின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

3 புதிய ஹைப்ரிட் எஸ்யுவிக்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் வலுவான் ஹைப்ரிட் எடிஷன் என்பது, மிகப்பெரிய ட்ரெண்டாக மாறி வருகிறது. எரிபொருள் செயல்திறன் சார்ந்த வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், உமிழ்வு விதிகளும் மிகவும் தீவிரமடைந்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு ஹைப்ரிட் அம்சத்தை பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷன்களுக்கான வலுவான மாற்று ஆப்ஷனாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் கருதுகின்றன. அந்த வகையில் ரெனால்ட், ஹுண்டாய் மற்றும் கியா போன்ற நிறுவனங்கள் தங்களது பிரபலமான எஸ்யுவிக்களில் வலுவான ஹைப்ரிட் எடிஷன்களை தயார்படுத்த தொடங்கியுள்ளன. இதன் மூலம் சார்ஜிங் உட்கட்டமைப்புகளை நம்பியிருக்க வேண்டிய அவசியமே இன்றி, மின்சார ஹைப்ரிட் வாகனங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் பயனர்களுக்கு உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள 3 வலுவான ஹைப்ரிட் எஸ்யுவிக்கள் குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் 3 வலுவான ஹைப்ரிட் எஸ்யுவிக்கள்:

1. ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட்

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள 3 வலுவான ஹைப்ரிட் எஸ்யுவி மாடல்களில், ரெனால்டின் டஸ்டர் முதலாவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு தீபாவளி சீசனின் போது டஸ்டரின் ஹைப்ரிட் எடிஷனை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த எஸ்யுவியில் 1.8 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினானது 49bhp எலெக்ட்ரிக் மோட்டார், 20bhp ஹைப்ரிட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் 1.4KWh பேட்டரி பேக் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் கலவையின் மூலமாக 160bhp ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் ஹைப்ரிட் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் மிகவும் சக்தி வாய்ந்த மாடல்களில் ஒன்றாக நிலைநிறுத்தப்படலாம். பெரிய பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின்சார அசிஸ்டன்சின் கலவையானது நிலையான செயல்திறன் மற்றும் மைலேஜை வழங்கும் என கூறப்படுகிறது. இதன் வழக்கமான மாடலின் பாதுகாப்பிற்கான 5 ஸ்டார் ரேட்டிங், ஹைப்ரிட் எடிஷனிலும் தொடர உள்ளது. உள்ளூர் சந்தையில் இதன் விலை ரூ.17.99 லட்சத்தில் தொடங்கி ரூ.20.09 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீளக்கூடும். லிட்டருக்கு 24 முதல் 26 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஹுண்டாய் க்ரேட்டா ஹைப்ரிட்:

ஹுண்டாய் நிறுவனத்தின் ஆகச்சிறந்த கார் மாடலான க்ரேட்டாவின், வலுவான ஹைப்ரிட் எடிஷன் 2027ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம், உள்நாட்டில் இந்த தென்கொரிய நிறுவனத்தின் ஹைப்ரிட் திட்டத்தில் க்ரேட்டா ஹைப்ரிட் மிக முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இந்த எஸ்யுவி ஆனது ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் என பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக ஹைப்ரிட் ஆப்ஷனும் சேர்க்கப்படுவது மிட்-சைஸ் எஸ்யுவியின் லைன் - அப்பை மேலும் விரிவுபடுத்தும். புதிய வலுவான ஹைப்ரிட் அம்சமானது எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஹைப்ரிட் அமைப்பானது எரிபொருள் உட்கொள்ளப்படுவதை கட்டுப்படுத்துகிறது. வழக்கமான எடிஷனை போலவே பாதுகாப்பிற்கான 5 ஸ்டார் ரேட்டிங்குடன், உள்ளூர் சந்தையில் ரூ.15 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரையிலான விலை வரம்பில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம். லிட்டருக்கு 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்

3.கியா செல்டோஸ் ஹைப்ரிட்

கியா செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷனும் 2027ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கியா நிறுவனமானது தனது தாய் குழுமமான ஹுண்டாயிடமிருந்து தொழில்நுட்ப வசதிகளை பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் க்ரேட்டாவி வழங்கப்பட உள்ள ஹைப்ரிட் அம்சம் செல்டோஸில் பயன்படுத்தப்படலாம். புதியதாக இணைக்கப்பட உள்ள வலுவான ஹைப்ரிட் ஆப்ஷனானது செல்டோஸின் லைன் - அப்பை மேலும் வலுவானதாக மாற்ற உதவும். அதோடு, மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து முழுமையான மின்சார காரை வாங்க விருப்பமில்லாதவர்களுக்கு, குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் வாய்ப்பாக செல்டோஸ் உருவெடுக்கும். உள்ளூரில் ஹைப்ரிட் மாடல்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கியா ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் செல்டோஸ் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடும். இதன் விலை ரூ.14.50 லட்சத்தில் தொடங்கி ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். லிட்டருக்கு 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கார் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் வலுவான ஹைப்ரிட் ரக வாகனங்கள் தற்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. எரிபொருள் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை கருத்தில் கொண்டு, புதிய ஹைப்ரிட் எஸ்யுவி மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள 3 முக்கியமான ஹைப்ரிட் எஸ்யுவி ரக கார்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான செயல்திறனை வழங்கும் இந்த வாகனங்கள், சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.