PulseNews
தொழில்நுட்பம்

மணிக்கு 216 கி.மீ வேகம்: ஜப்பானைத் தாக்கிய டால்பின் புயல்; சீனா, தைவானில் விமானங்கள் ரத்து

டால்பின் சூறாவளிப் புயல் ஜப்பானின் ஒகினாவா தீவுகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்த சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியால் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 14,000 கட்டிடங்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் புயல் மேற்கு திசையை நோக்கிச் சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, ஆகஸ்ட் 8, சனிக்கிழமை காலை 8:30 மணி (IST) நிலவரப்படி, டால்பின் புயல் ஒகினாவாவின் குமே தீவுக்கு வடமேற்கே சுமார் 160 கி.மீ தொலைவில் மையமிட்டுள்ளது. இது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அப்போது புயலின் மையப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ ஆகவும், சுழன்றடிக்கும் காற்றின் வேகம் மணிக்கு 216 கி.மீ வரை எட்டியுள்ளது. இந்த புயல் காரணமாகத் தெற்கு ஜப்பானின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. Three hours later and Cape Hedo, Okinawa still getting lashed by the back end eyewall of typhoon Dolphin pic.twitter.com/E5jSoGMnIw — James Reynolds (@EarthUncutTV) August 7, 2026 ஒகினாவா மற்றும் ககோஷிமா ஆகிய மாகாணங்களில் உள்ள சுமார் 2,60,000 மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது. ஒகினாவாவில் புயலின் சீற்றத்தால் 5 பேர் காயமடைந்தனர், இருப்பினும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டால்பின் புயல் உருவானது எப்படி? மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான ஒரு வெப்பமண்டலக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஜூலை 27 அன்று வெப்பமண்டலப் புயலாக மாறியது. பெருங்கடலின் வெப்பமான நீர்நிலைகள் காரணமாக வேகமாகக் தீவிரமடைந்து, ஜூலை 30 அன்று மணிக்கு சுமார் 270 கி.மீ வேகத்தில் வீசிய "சூப்பர் சூறாவளியாக" (Super-typhoon) உருவெடுத்தது. பிற வெப்பமண்டல சூறாவளிகளைப் போலவே, டால்பின் புயலும் கடல்நீரின் வெப்பத்திலிருந்து ஆற்றலைப் பெற்றது. சாதகமான வளிமண்டலச் சூழலில் கடல்நீரின் வெப்பமும் ஈரப்பதமும் புயலை மேலும் வலுப்படுத்தின. தற்போது இதன் தீவிரம் கணிசமாகக் குறைந்திருந்தாலும், சீனாவை நெருங்கும் போது பலத்த காற்று, கனமழை மற்றும் ஆபத்தான கடலோரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் வல்லமையுடன் காணப்படுகிறது. Typhoon Dolphin is currently hitting Okinawa, Japan, bringing strong winds and heavy rainfall to the region. pic.twitter.com/OpVFkpGtsi — Weather Monitor (@WeatherMonitors) August 7, 2026 சீனாவின் கிழக்குப் பகுதிகளில் ஆகஸ்ட் 12 வரை மிகக் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தின் சில பகுதிகளில் 600 மி.மீ-க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனப் கணி்க்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 (ஞாயிறு) இரவுக்கும் ஆகஸ்ட் 10 (திங்கள்) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் புயல் சீனாவின் கிழக்குக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெஜியாங் மாகாணத்தின் ஜூஷான் (Zhoushan) மற்றும் புஜியான் மாகாணத்தின் புடிங் (Fuding) ஆகிய பகுதிகளுக்கு இடையே புயல் கரையை கடக்கக்கூடும். ஜெஜியாங்கில் கடலோரப் புயல் எச்சரிக்கை உயர்மட்டத்திற்கு உயர்த்தப்பட்டு, துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன; 162 பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஷாங்காயின் யாங்ஷான் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. சீனா 3-ம் நிலை அவசரக்காலப் பதிலளிப்பு முறையை அமல்படுத்தியுள்ளதுடன், ஜெஜியாங்கின் சில பகுதிகளில் பள்ளிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. அதேவேளையில், புயல் நெருங்குவதை அடுத்து தைவானில் 63 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் அங்கு மக்களை வெளியேற்ற இன்னும் உத்தரவிடப்படவில்லை.

The Indian Express23 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மணிக்கு 216 கி.மீ வேகம்: ஜப்பானைத் தாக்கிய டால்பின் புயல்; சீனா, தைவானில் விமானங்கள் ரத்து
PulseNews சுருக்கம்

ஜப்பானின் ஒகினாவா தீவுகளை டால்பின் சூறாவளிப் புயல் கடுமையாகத் தாக்கியதில், 5 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 14,000 கட்டிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த இந்தப் புயலால், ஜப்பானில் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் ஒகினாவா மற்றும் ககோஷிமா மாகாணங்களில் 2,60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற உத்தரவிடப்பட்டது.

தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து வரும் இப்பயல், ஆகஸ்ட் 9 இரவு அல்லது ஆகஸ்ட் 10 அதிகாலை ஜெஜியாங் மற்றும் புஜியான் மாகாணங்களுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீனாவில் துறைமுகங்கள் மூடப்பட்டு, படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, பள்ளிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும், புயல் முன்னெச்சரிக்கையாகத் தைவானில் 63 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology