எம்.எல்.ஏ - க்களுக்கு அரசு கார் மற்றும் பராமரிப்புப் படி: அவசியமான தேவையா? ஆடம்பரச் செலவா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அனைத்து 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம், எரிபொருள் மற்றும் பராமரிப்புக்காக மாதம் ரூ.75,000, மேலும் உதவியாளருக்கு மாதம் ரூ.25,000 வழங்குவதாக அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் இடையேயும் பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. யாரு பணத்துல? இது அவசியமான செலவா? என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். இது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பணிகளைத் தொய்வின்றி செய்ய உதவும் ஒரு அத்தியாவசிய நடவடிக்கை எனக் கருதுகின்றனர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி முழுவதும் பயணம் செய்து, அடித்தட்டு மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசு திட்டங்கள் சரியாகச் சென்று அடைகிறதா என்பதைக் கண்காணிக்கவும் போக்குவரத்து வசதி மிக முக்கியமானது. ₹1 lakh per month for every MLA for a vehicle and an assistant. யாரு பணத்துல? இது அவசியமான செலவா? How much is the state debt again? https://t.co/FApiZ8QHNw — Nazia Farheen 2.0 (@NaziaFarheen84) August 19, 2026 மேயர்கள், நகராட்சி மற்றும் ஒன்றியத் தலைவர்கள் போன்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கே அரசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பல லட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.எல்.ஏ-க்களுக்கு இத்தகைய வசதிகள் இல்லாதது அவர்களின் செயல்பாட்டிற்குச் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, சொந்தமாக வாகனம் வசதி இல்லாத அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும். One car per MLA - one time cost of around 20L (I hope they do not spend more than this!). Monthly expenditure of 1L per MLA for car driver, petrol, maintenance and an assistant. This equals 46.8 Cr one time and 2.34 Cr per month or 28.08 Cr per annum. This is a small number... — Badri Seshadri (@bseshadri) August 19, 2026 மேலும், தொகுதி சார்ந்த பணிகளைக் கவனித்துக் கொள்ளவும், மனுக்களைப் பராமரிக்கவும் ஒரு அலுவலக உதவியாளருக்கு நிதி ஒதுக்குவது அவர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும். ஒட்டுமொத்த மாநில பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, இத்திட்டத்திற்கான செலவு ஒரு சிறிய தொகையே என்றும், இதன் மூலம் மக்கள் பணி விரைவுபடும் என்றால் இது ஒரு பயனுள்ள முதலீடே என்றும் சிலர் கருதுகின்றனர். மறுபுறம், இத்திட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகிறது. தமிழக அரசு ஏற்கனவே பெரும் கடனில் இருக்கும் சூழலில், மக்கள் வரிப் பணத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு ஆடம்பரக் கார்கள் வழங்குவது தேவையற்ற செலவு என்றும், நிதியை வீணடிக்கும் செயல் என்றும் சமூக ஆர்வலர்களும் நெட்டிசன்களும் சுட்டிக்காட்டுகின்றனர். பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் சொந்தமாக ஆடம்பரக் கார்களை வைத்திருப்பதை அவர்களின் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் உறுதிப்படுத்துகிறது. If municipal chairman, mayors, and panchayat union chairpersons, govt officials get official govt vehicles.. Why not MLAs? They have to manage an entire constituency and address public needs on time.. #TVK #TVKGovt #CMVijay #CMJosephVijay #TNAssembly https://t.co/oCTtPtrnyI — Gomathi Sivam (@GomatiSivam) August 19, 2026 கணக்கீடுகளின்படி, 234 எம்.எல்.ஏ-க்களுக்கும் கார்கள் வாங்க சுமார் ரூ.50 முதல் ரூ.70 கோடி வரை ஒருமுறை செலவும், மாதந்திரப் படிகளாக ஆண்டுக்கு ரூ.28 கோடிக்கும் அதிகமாகவும், 5 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.200 கோடிக்கு மேல் அரசுப் பணத்திலிருந்து செலவாகும் சூழல் உருவாகிறது. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல் MLAக்கு கார் கொடுத்த CM வள்ளலே !! இந்த அறிவிப்புக்கான தேராய செலவு ஒரு காரின் மதிப்பு உத்தேசமாக ₹30 லட்சம் 234 கார்களுக்கு one time exp: 70.20 கோடி பராமரிப்பு ₹1 லட்சம் மாதம் 234 MLAகளுக்கு பிரதி மாதம்: 2.34 கோடி ஆண்டொன்றுக்கு: ₹28.08 கோடி... pic.twitter.com/RyaUaIRh0V — சோழதேசத்தான் (@venk1975) August 19, 2026 இந்த நிதியைக் கொண்டு கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் புதிய ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து தருவது, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற பொதுமக்களுக்கு நேரடியாகப் பயன்படும் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. மேலும், கஜானா காலியாக இருப்பதாகக் கூறிவிட்டு, மக்கள் பிரதிநிதிகளுக்கு இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவது முரண்பாடாக உள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது. அனாவசியா செலவு.. MLA க்கள் எல்லாம் சொந்தமா கார் வாங்க முடியும். தேர்தல் Affidavit ல பாருங்க, எல்லா MLA க்களும் சொந்தமா கார் இருக்குனு எழுதியிருப்பாங்க. அனைத்து கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒரு Ambulance கொடுத்தாலும் நியாயமா இருக்கும்.. தேவையில்லாம மக்கள் வரிப் பணத்தை... https://t.co/3e5NBP3yEv — Truth Alone 🇮🇳 (@TruthAlone2) August 19, 2026 சுருக்கமாகக் கூறின், மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறனை அதிகரிக்க இத்தகைய வசதிகள் அவசியம் என்று ஒரு சாராரும், நிதி நெருக்கடி நிலவும் காலத்தில் மக்கள் பணத்தை இதுபோன்று செலவிடுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று மற்றொரு சாராரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் மற்றும் அதன் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதம் 75,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதனுடன், சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளருக்கு மாதந்தோறும் 25,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதியில் பணியாற்றுவதற்கு இந்த நிதி உதவி அவசியமானது என ஒரு தரப்பினர் கருதும் நிலையில், இது மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் தேவையற்ற ஆடம்பரச் செலவு என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.