Upcoming Two Wheelers: Yamaha R2 முதல் Ather Konarc வரை.. ரெண்டே மாசத்துல இந்தியாவுக்கு வரப்போகும் 7 டூ வீலர்கள் - என்னென்ன?

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாகன நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய இரு சக்கர வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் என அடுத்த 2 மாதங்களுக்கு இந்தியாவில் அறிமுகமாக உள்ள இரு சக்கர வாகனங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1.Yamaha R2:

யமஹா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் வரவேற்பு உள்ளது. இதில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் Yamaha R2 ஆகும். இதில் 200 சிசி எஞ்ஜின் கிளாஸ் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 2.5 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

2. 2026 Bajaj Pulsar:

பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் Bajaj Pulsar. இந்த பைக்கின் அப்டேட் வெர்சனாக இந்தாண்டு அறிமுகமாக உள்ளது 2026 Bajaj Pulsar. இந்த பைக் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த பைக்கில் பழைய பல்சர் பைக்கில் இருந்ததை காட்டிலும் எஞ்ஜின், மைலேஜ் ஆற்றல் வேறு வகையில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

3. Norton Manx R:

விலையுயர்ந்த இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் Norton Manx R. இந்த பைக்கின் விலை ரூபாய் 30 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த பைக் இந்த மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

4. Ather Konarc:

ஏதர் நிறுவனம் புதியதாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் Ather Konarc. இந்த Ather Konarc இ ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 450 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் இந்திய சந்தையில் ஏதரின் மதிப்பு மேலும் அதிகமாகும் என்று கருதப்படுகிறது.

5.Royal Enfield Himalayan 440:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரு சக்கர வாகனங்களில் ஒன்று Royal Enfield Himalayan 440. இந்த அட்வெஞ்சர் இரு சக்கர வாகனம் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த பைக் இந்திய சந்தையில் அறிமுகமானால் 2.5 லட்சம் வரை விற்பனை விலை இருக்கும் என்று கருதப்படுகிறது. சிங்கிள் சிலிண்டர் ப்ளாட்ஃபார்ம் ஆகும். இதன் தோற்றமும், ஆற்றலும் நெடுந்தூர பயணத்திற்கு தக்கதாக உள்ளது.

6.Simple Arrive:

இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனத்தில் ஒன்று Simple எனர்ஜி நிறுவனம் முக்கியமானது. இவர்களின் Simple Arrive இ ஸ்கூட்டர் வரும் செப்டம்பர் 2ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1.3 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமானால் மற்ற இ ஸ்கூட்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

7. Triumph Bonneville 350:

ட்ரூம்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. ட்ரூம்ப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள பைக் Triumph Bonneville 350. இந்த பைக்கில் 350 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் அறிமுகமானால் ரூபாய் 2 லட்சம் முதல் ரூபாய் 2.5 லட்சம் வரை விற்பனை விலை இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய மாடல்களை வாகன நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 7 புதிய இரு சக்கர வாகனங்கள் குறித்த விவரங்களை நாம் இங்கு காணலாம்.
இந்த வரிசையில் யமஹா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'யமஹா ஆர்2' (Yamaha R2) மற்றும் ஏத்தர் நிறுவனத்தின் 'ஏத்தர் கோனார்' (Ather Konarc) உள்ளிட்ட வாகனங்கள் சந்தைக்கு வரவுள்ளன. புதிய வாகனங்களின் வரவு இந்திய இரு சக்கர வாகன சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.