PulseNews
தொழில்நுட்பம்

ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!

இ்ந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி நிறுவனம். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் வரவேற்பு உள்ளது. இவர்கள் பட்ஜெட் விலை முதல் சொகுசு கார்கள் வரை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக விற்பனை செய்து வருகின்றனர்.

Alto K10 காருக்கு தள்ளுபடி:

இவர்களின் பட்ஜெட் விலை காரில் மிகவும் முக்கியமான கார் Alto K10. முதன்முறை கார் வாங்குபவர்களுக்கும், பட்ஜெட் விலையில் கார் வாங்குபவர்களுக்கும் Alto K10 கார் முதன்மையான தேர்வாக உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 4.42 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 6.47 லட்சம் ஆகும்.

இந்த காருக்கு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

1. Alto K10 - LXi Petrol - ரூபாய் 52 ஆயிரத்து 500

2. Alto K10 - Other Petrol - ரூபாய் 42 ஆயிரத்து 500

3. Alto K10 - CNG - ரூபாய் 37 ஆயிரத்து 500

4 லட்சம் பட்ஜெட்:

ஆல்டோ காருக்கு அளிக்கப்பட்டுள்ள தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த தள்ளுபடியால் ரூபாய் 4 லட்சம் விலையில் ஆல்டோ காரை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஆல்டோ காரில் மொத்தம் 8 வேரியண்ட் உள்ளது. இதில் LXi (O) Petrol காரின் ஆன்ரோட் விலை ரூபாய் 4.76 லட்சம் ஆகும். தற்போதைய சலுகையால் இந்த காரை 4.25 லட்சம் விலையில் வாங்க இயலும்.

சிறப்புகள்:

ஆல்டோ கார் பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜியிலும் இயங்கும் ஆற்றல் கொண்டது. சிஎன்ஜி வேரியண்டிற்கு ரூபாய் 37 ஆயிரத்து 500 அளிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 68 எச்பி குதிரைத்திறன் கொண்டது.

இந்த காரில் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் கொண்டது. 91.1 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 214 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. இந்த காரின் உட்கட்டமைப்பும் மிகவும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 2 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வித் இபிடி, இஎஸ்பி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ் வசதி உள்ளது. ஹை ஸ்பீட் அலர்ட் வசதி உள்ளது. சிவப்பு, வெள்ளி, சாம்பல் மற்றும் நீல வண்ணங்கள் உள்ளது. இந்த காரில் பின் இருக்கை வரிசை சற்று இட நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.

66 பிஎச்பி குதிரை மற்றும் 89 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1.0 லிட்டர் 3 சிலிண்டர் எஞ்ஜின் ஆகும். மேனுவலில் 5 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் வேகத்தை 5.23 நொடிகளில் எட்டும். 12.15 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரூபாய் 4 லட்சம்தான் விலை.. ஆகஸ்ட் மாத தள்ளுபடி.. தள்ளிட்டுப் போங்க Alto K10 கார்!
PulseNews சுருக்கம்

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, தனது பிரபலமான பட்ஜெட் காரான ஆல்டோ கே10 (Alto K10) மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதம் சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த சலுகையின்படி, எல்எக்ஸ்ஐ (LXi) பெட்ரோல் மாடலுக்கு 52,500 ரூபாயும், பிற பெட்ரோல் வேரியண்டுகளுக்கு 42,500 ரூபாயும், சிஎன்ஜி (CNG) மாடலுக்கு 37,500 ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் இந்த காரை வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது.

998 சிசி எஞ்சின் திறன் கொண்ட இந்த கார், 25 கி.மீ மைலேஜ் மற்றும் 68 எச்பி குதிரைத்திறனை வழங்குகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வுகளில் கிடைக்கும் இதில், 2 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வித் இபிடி, ஈஎஸ்பி மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 214 லிட்டர் டிக்கி வசதி கொண்ட இந்த கார், நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology