Upcoming Budget Cars: அடுத்தடுத்து 4 புது கார்கள்..! ரூ.6 லட்சம் தான் பட்ஜெட்டே, உங்களுக்கான சாய்ஸ் எது? வசதி, அம்சங்கள்

Upcoming Budget Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செம்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள 4 கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

செப்டம்பரில் விற்பனைக்கு வரும் பட்ஜெட் கார்கள்:

2026ம் ஆண்டிற்கான விழாக்காலத்தை நெருங்கி வரும் நிலையில், கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பல தரப்பட்ட பிரிவுகளில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு செப்டம்பர் மாதம் மிகவும் தீவிரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாருதி சுசூகி, மஹிந்த்ரா, ரெனால்ட் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்களை விற்பனைக்கு பட்டியலிட்டுள்ளன. அவை தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து விற்பனைக்கு வரும் 4 கார்கள்:

1. புதிய மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்

பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2026 செப்டம்பர் 5 அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும் என மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஹேட்ச்பேக், தற்போதுள்ள 90bhp, 1.2-லிட்டர், மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் CNG பவர்ட்ரெய்ன் ஆப்ஷன் ஆகியவற்றை அப்படியே தக்கவைத்துக்கொண்டு, உட்புறமும் வெளிப்புறமும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெறும். இதன் உட்புறம், பெரிய 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன், புதிய ட்ரிம்கள், அப்ஹோல்ஸ்டரி மற்றும் கேபின் தீம் ஆகியவற்றைக் கொண்டு மேம்படுத்தப்படும். நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள் இதன் ஒட்டுமொத்த தோற்றத்தை மேலும் மேம்படுத்தும். இதன் விலை 6 லட்சத்தில் தொடங்கி 10 லட்சம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட்

புதிய மஹிந்த்ரா தார் ஃபேஸ்லிஃப்ட், தார் ராக்ஸிலிருந்து இரட்டை அடுக்கு 6-ஸ்லாட் க்ரில் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 5 ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளிட்ட பல வடிவமைப்பு அம்சங்களைப் பெறுகிறது. அதேநேரம் இன்ஜின் விவரங்களில், தற்போதுள்ள 119bhp, 1.5-லிட்டர் டீசல், 132bhp, 2.2-லிட்டர் மற்றும் 152bhp, 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை அப்படியே தக்க வைத்துக் கொள்ளுமாம். இதன் விலை வரம்பு ரூ.9.50 லட்சம் முதல் 18 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுமாம். அதாவது தற்போதுள்ள எடிஷனின் விலையை காட்டிலும் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்வை பெறக்கூடும்.

3. ரெனால்ட் ட்ரைபர் டர்போ

ரெனால்ட் இந்தியா இறுதியாக ட்ரைபர் வரிசையில் 1.0-லிட்டர், மூன்று-சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்த உள்ளது. கைகர் காரில் இருந்து பெறப்பட்ட இந்த இன்ஜின், அதிகபட்சமாக 100PS பவரையும் 160Nm டார்க்கையும் வழங்குகிறது. இந்த MPV, தொடர்ந்து 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வரும். சுவாரஸ்யமாக, புதிய ரெனால்ட் ட்ரைபர் டர்போ, ஃபேக்டரி-ஃபிட்டட் CNG கிட் உடனும் கிடைக்கும். இதன் விலை வரம்பு ரூ.6 லட்சம் முதல் 9.2 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுமாம்.

இதையும் படியுங்கள்: SUV Feature: ரூ.64 லட்சம் மதிப்பிலான எஸ்யுவிக்கு டஃப் கொடுக்கும் ரூ.15 லட்சம் கார் - அம்சங்களில் டாப் டக்கர் -எப்படி?

4. ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா , மேம்படுத்தப்பட்ட ஸ்லாவியா செடான் காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது . MY2026 மாடலான இது, 1.0-லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் மற்றும் புதிய 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்புடன் வழங்கப்படும். மற்ற இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அப்படியே தக்கவைக்கப்படும். இந்த செடான் காரில், பெரிய 10.25-இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, AI அசிஸ்ட் மற்றும் பின் இருக்கை மசாஜ் வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெறும். இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் பல குறிப்பிடத்தக்க தோற்ற மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை வரம்பு ரூ.10.50 லட்சம் முதல் 19 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுமாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதம் 4 புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இவை சுமார் 6 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் அறிமுகமாகின்றன.
பண்டிகை காலத்தை முன்னிட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு புதிய மாடல்களை சந்தையில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளன. இந்த வரிசையில் வரும் புதிய கார்களின் வசதிகள் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்களை வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.