PulseNews
தொழில்நுட்பம்

SUV Feature: ரூ.64 லட்சம் மதிப்பிலான எஸ்யுவிக்கு டஃப் கொடுக்கும் ரூ.15 லட்சம் கார் - அம்சங்களில் டாப் டக்கர் -எப்படி?

Toyota Fortuner Vs Mahindra Thar Roxx: அம்சங்கள் அடிப்படையில் டொயோட்டா ஃபார்ட்சுனரை விட, மஹிந்த்ராவின் தார் ராக்ஸ் எப்படி சிறந்தது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ப்ரீமியம் எஸ்யுவி Vs பட்ஜெட் எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 60 லட்சம் ரூபாய் பட்ஜெட் பிரிவில் ஏராளமான எஸ்யுவிக்கள் கிடைக்கின்றன. அவை சிறந்த அம்சங்கள், அட்டகாசமான செயல்திறன் மற்றும் ப்ரீமியம் கேபின் அனுபவத்தை கொண்ட தொகுப்பாக விளங்குகிறது. ஆனால், இந்த பிரிவில் மக்களின் பிரதான தேர்வாக டொயோட்டாவின் ஃபார்ட்சுனர் மாடல் உள்ளது. அதிகப்படியான அம்சங்களையும், வலுவான அல்லது ப்ரீமியம் அனுபவத்தை வழங்காவிட்டாலும் மக்கள் அந்த ஜப்பான் காரை விரும்புகின்றனர். ஆனால், இந்த 64 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிலான எஸ்யுவியை காட்டிலும் 15 லட்சம் மதிப்பிலான எஸ்யுவி கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆச்சரியப்பட வேண்டாம், இந்திய ஆஃப் ரோட் பிரியர்களின் பிரதான தேர்வுகளில் ஒன்றாக இந்த கார் உள்ளது.

ஃபார்ட்சுனர் Vs தார் ராக்ஸ் - வித்தியாசங்கள் என்ன?

மேலே சொன்ன அந்த ரூ.15 லட்சம் எஸ்யுவி ஆனது மஹிந்திராவின் தார் ராக்ஸ் தான். அதிக அம்சங்களும் ப்ரீமியம் தன்மையும் இல்லாத போதிலும், மக்கள் ஃபார்ட்சுனரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் ஆஃப்-ரோடு திறனாகும். உறுதியான கட்டமைப்பு மற்றும் டொயோட்டாவின் நம்பகத்தன்மை இதற்கு ஊக்கமளிக்கின்றன. அதேநேரம், ரூ. 15 லட்சம் மதிப்பிலான தார் ராக்ஸ் மாடலும் ஒரு வலுவான கட்டமைப்பைக் கொண்ட மிகவும் திறமையான ஆஃப்-ரோடர் ஆகும். ஃபார்ட்சுனருடன் ஒப்பிட்டால் இது அதிக அம்சங்களையும் ஒரு ப்ரீமியம் கேபின் அனுபவத்தையும் வழங்குகிறது.

மஹிந்திரா தார் ராக்ஸ்

டொயோட்டா ஃபார்ட்சுனர்

பனோரமிக் சன்ரூஃப்

இல்லை

10.25 இன்ச் டச்ஸ்க்ரீன்

8 இன்ச் டச்ஸ்க்ரீன்

10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இல்லை

டால்பி அட்மாஸ் உடன் கூடிய 9-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம்

11-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம்

பவர்ட் மற்றும் வென்டிலேடட் வசதியுள்ள முன் இருக்கைகள்

பவர்ட் மற்றும் வென்டிலேடட் வசதியுள்ள முன் இருக்கைகள்

மல்டி டெரெய்ன் மோட்கள்

மல்டி டெரெய்ன் மோட்கள்

எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃப்ரென்சியல்

லாக்கபிள் டிஃப்ரென்சியல்

லெவல் 2 ADAS

ADAS வசதி இல்லை

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

360 டிகிரி கேமரா

360 டிகிரி கேமரா

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜர்

ப்ளைண்ட் வியூ மானிட்டர்

ப்ளைண்ட் வியூ மானிட்டர்

ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்

மேனுவல் ஹேண்ட் ப்ரேக்

முழுமையான தானியங்கி காலநிலை கட்டுப்பாடு

இரட்டை மண்டல தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு அமைப்பு

பவர்ட் டெயில்கேட்

ஃபார்ட்சுனர் Vs தார் ராக்ஸ் - எதில் அம்சங்கள் அதிகம்?

அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, தார் ராக்ஸ் நிச்சயமாக டொயோட்டா ஃபார்ட்சுனரை விட சிறந்தாக உள்ளது. ஃபார்ட்சுனரின் விலை ரூ. 62 லட்சம் வரை சென்றாலும், அந்த விலையில் எதிர்பார்க்கப்படும் ப்ரீமியம் மற்றும் ஆடம்பரம் அதில் இல்லை. மறுபுறம், தார் ராக்ஸின் உட்புறம் மிகவும் ப்ரீமியம் உணர்வைத் தருகிறது. நீங்கள் தொடும் மற்றும் உணரும் அனைத்தும் மென்மையாக உள்ளன. தார் ராக்ஸ், ஃபார்ட்சுனரைப் போல நம்பகமானதாகவும், அந்தஸ்து நிறைந்ததாகவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஃபார்ட்சுனர் கொண்டிருக்காத ஏராளமான அம்சங்கள், சொகுசு வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

ஃபார்ட்சுனர் Vs தார் ராக்ஸ் - செயல்திறன் எப்படி?

இரண்டு எஸ்யுவிகளும் முற்றிலும் மாறுபட்ட வகைகளைச் சேர்ந்தவை என்றாலும், அவற்றின் செயல்திறனில் பெரிய வித்தியாசம் இல்லை.

மஹிந்த்ரா தார் ராக்ஸ்: 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வெர்ஷன் 160bhp மற்றும் 330Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. அதன் மற்றொரு வெர்ஷனான 6-ஸ்பீட் TC வெர்ஷன் பாராட்டத்தக்க வகையில் 174bhp மற்றும் 380Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதேபோல், டீசல் இன்ஜினும் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைக்கிறது. RWD மற்றும் 4X4 வெர்ஷனில் வரும் 6-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் 150bhp மற்றும் 330Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும், 4X4 உடன் வரும் 6-ஸ்பீட் TC ஆப்ஷன் 172bhp மற்றும் 400Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.

இதையும் படியுங்கள்: Ola S1Z: இனி நான் தான் கிங்கு..! ரூ.80,000 பட்ஜெட், 301KM ரேஞ்ச் - ஒலாவின் லைட் வெயிட் மின்சார் ஸ்கூட்டர் - அம்சங்கள் எப்படி?

டொயோட்டா ஃபார்ட்சுனர்: பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. 2.8-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைந்து 163bhp சக்தியையும் 245Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. அதேநேரம், 2.7-லிட்டர் டீசல் இன்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவற்றுடன், 201bhp சக்தியையும் 500Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதோடு, ரியர் வீல் ட்ரைவ் மற்றும் 4X4 ஆகிய தேர்வுகளும் உள்ளன. இந்த இரண்டு எஸ்யுவிகளின் ஆஃப்-ரோட் செயல்திறனும் மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. மேலும், கரடுமுரடான பாதைகளைச் சமாளிக்க உதவும் நல்ல உபகரணங்களையும் இரண்டுமே கொண்டுள்ளன.

ஃபார்ட்சுனர் Vs தார் ராக்ஸ் - யாருக்கு எது பொருந்தும்?

ஆஃப்-ரோட் செயல்திறனில் எந்த சமரசமும் செய்யாமல், ஒரு ப்ரீமியம் கேபினுடன் கூடிய நவீன மற்றும் வசதியான எஸ்யுவியை விரும்புவோருக்கு தார் ராக்ஸ் நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.15 லட்சத்தில் தொடங்கி ரூ.29 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. மறுபுறம், கம்பீரமான தோற்றம், சாலையில் ஒரு குறிப்பிடத்தக்க இருப்பு மற்றும் சக்தியை விரும்புவோருக்கு ஃபார்ட்சுனர் ஒரு நம்பகமான தேர்வாக விளங்குகிறது. இதன் விலை ரூ.40.18 முதல் ரூ.64.47 லட்சம் (ஆன் - ரோட்) நீள்கிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
SUV Feature: ரூ.64 லட்சம் மதிப்பிலான எஸ்யுவிக்கு டஃப் கொடுக்கும் ரூ.15 லட்சம் கார் - அம்சங்களில் டாப் டக்கர் -எப்படி?
PulseNews சுருக்கம்

சுமார் ரூ.64 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு, ரூ.15 லட்சம் விலையில் கிடைக்கும் மஹிந்திரா தார் ராக்ஸ் கார் கடும் போட்டியை அளித்து வருகிறது. அம்சங்களின் அடிப்படையில் இந்த இரண்டு வாகனங்களும் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பது குறித்த விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய வாகனச் சந்தையில் ரூ.60 லட்சம் பட்ஜெட்டில் பல பிரீமியம் எஸ்யுவி ரக கார்கள் கிடைக்கின்றன. இவை சிறப்பான செயல்திறன் மற்றும் உயர்தர உட்புற அமைப்புகளைக் கொண்டிருந்தாலும், மஹிந்திராவின் தார் ராக்ஸ் குறைந்த விலையில் அதிரடி அம்சங்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology