PulseNews
தொழில்நுட்பம்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது..

இன்றைய நாள், ஆகஸ்ட் 19, 2026-க்கான முக்கிய 10 செய்திகள்:

1.அமித்ஷா வருகை.. மாமல்லபுரத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு

தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். மாமல்லபுரம் அருகே நடைபெறும் இக்கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

2. 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3. இன்ஜினியரிங் சேர்க்கை கலந்தாய்வு நிலவரம்

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் சுமார் 60,000 மாணவர்களுக்குத் தற்காலிக இட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

4. மேட் ஆஃப் சென்னை' மேரத்தான் பதிவு நிறைவு

ஆகஸ்ட் 23 அன்று நடைபெறவுள்ள 'The Hindu Made of Chennai Run' மேரத்தான் போட்டிக்கான முன்பதிவு செய்யும் கடைசி நாள் இன்றோடு (ஆகஸ்ட் 19) நிறைவடைகிறது.

5. PM CARES நிதி குறித்த தணிக்கை அறிக்கை வெளியீடு

PM CARES நிதிக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு நன்கொடைகள் கடந்த நிதியாண்டில் முறையே 30% மற்றும் 18% வரை குறைந்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

6. மாணவர் போராட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றம் உயர்மட்டக் குழு அமைப்பு

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை அத்துமீறிச் செயல்பட்டதாக எழுந்த புகார்களை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் அடங்கிய குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

7. மத்திய நிதி அமைச்சர் வங்கியாளர்களுடன் ஆலோசனை

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'Gen Z' இளைய தலைமுறையினருக்கான வங்கிச் சேவைகளை மேம்படுத்துவது மற்றும் வங்கிகளின் வைப்புத்தொகையை (Deposits) அதிகரிப்பது குறித்து முன்னணி வங்கியாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

8.மத்திய அரசின் புதிய உள்நாட்டு பாதுகாப்புப் பொருட்கள் பட்டியல்

இராணுவ வலிமையை அதிகரிக்க ஹெலிகாப்டர்கள் முதல் போர்க்கப்பல்கள் வரை உள்நாட்டிலேயே தயாரிக்கும் புதிய பாதுகாப்புப் பொருட்கள் பட்டியலை (Indigenisation List) மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

9.டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள்: ரிஷப் பண்ட் சாதனை

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 100 சிக்ஸர்களைக் கடந்து, மிகக் குறைந்த போட்டிகளில் (51 போட்டிகள்) இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

10. இன்றைய சட்டமன்ற நிகழ்வுகள்

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PulseNews சுருக்கம்

தற்போதைய வேகமான உலகில், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்கும் வழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. இதனால், மக்கள் தங்களுக்குத் தேவையான முக்கியத் தகவல்களை விரைவாகத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.

இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், நாட்டில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வுகளை மட்டும் தொகுத்து ஏபிபி நாடு வழங்குகிறது. இவற்றை மட்டும் படித்தாலே அன்றைய முக்கியச் செய்திகளை விரைவாகப் புரிந்துகொள்ள முடியும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology