விஜய் அறிவித்த கார் எங்களுக்கு வேணாம்: சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்
ஆகஸ்ட் 19-ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தொகுதி சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றார். மேலும் இதற்காக மாதம் தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகன படியாக வழங்கப்படும். எம்.எல்.ஏ-க்கள் உதவியாளர் ஒருவரை நியமித்து கொள்ளலாம்; இதற்கு அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றார். சட்டமன்றமா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? கொந்தளித்த உதயநிதி... பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா இந்த அறிவிப்பிற்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்த கார் தங்களுக்கு வேண்டாம் என்று தி.மு.க கடிதம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்கள் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தி.மு.க-வைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாகனங்களை பெறுவதில்லை என்று முடிவு எடுத்துள்ளோம். அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவை குறைக்கும் நோக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி, பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாகனத்தை வழங்க வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த கடிதத்தை உங்களின் மூலமாக அரசுக்கு வழங்குகிறேன் என்றார். தொடர்ந்து, கார் இல்லாத உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் கொடுக்கலாம். எங்கள் உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு என சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். பா.ம.க-வும் தங்களது எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வேண்டாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், வாகனப் படியாக மாதம் 75 ஆயிரம் ரூபாயும், உதவியாளர் ஒருவரை நியமிக்க 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புகளுக்கு தி.மு.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் கார் தங்களுக்குத் தேவையில்லை என்று சபாநாயகரிடம் தி.மு.க கடிதம் அளித்துள்ளது.