PulseNews
தொழில்நுட்பம்

SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி

SUV Rivals: எஸ்யுவி மீதான மறக்கச் செய்யும் 4 கார் மாடல்களின் சுவாரஸ்யமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

எஸ்யுவிக்களுக்கே டஃப் கொடுக்கும் கார் மாடல்கள்:

இந்தியாவில் புதியதாக கார் வாங்கும் பெரும்பாலானோருக்கு எஸ்யுவி என்பது இயல்பான தேர்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதற்கு அதிகப்படியான இருக்கை வசதி, கம்பீரமான சாலை தோற்றம் மற்றும் நடைமுறைக்கு உகந்த வடிவமைப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. அதிகரித்து வரும் எஸ்யுவிக்களின் பிரபலமானது சில உண்மையான மற்றும் தரமான செடான்கள், ஹேட்ச்பேக்குகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களை இருட்டடிப்பு செய்கிறது. வாகனம் ஓட்டும் அனுபவத்தை கொண்டாடும் நபர்கள், செயல்திறன் அல்லது வழக்கமான எஸ்யுவி ஃபார்முலாவில் இருந்து வேறுபட்ட ஒரு கார் அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு உள்நாட்டில் தற்போதும் பல மாற்று ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் எஸ்யுவியே வேண்டாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில், கவனத்தை ஈர்க்கும் ஹேட்ச்பேக் தொடங்கி,செயல்திறன் மிக்க செடான்கள் என உள்ளூரில் கிடைக்கும் 4 அட்டகாசமான மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

5 கார் மாடல்களின் விவரங்கள்:

1. ஃபோக்ஸ்வாகன் கால்ஃப் GTI

எஸ்யுவி வாகனத்திற்கு மாறாமல் அதன் முழு அனுபவத்தையும் பெற விரும்பும் ஒருவருக்கு ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI சரியான தேர்வாக இருக்கும். இந்தியாவிற்கான Mk8.5 கோல்ஃப் GTI மாடலில், 265 PS மற்றும் 370 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 2.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜின், 7 ஸ்பீட் DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு100 கிலோ மீட்டர் வேகத்தை 5.9 வினாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கச்சிதமான டிசைன், முன் சக்கர இயக்கம் மற்றும் செயல்திறனை மையமாகக் கொண்ட சேசிஸ் ஆகியவை, வழக்கமான எஸ்யுவிகளிலிருந்து இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தன்மையை அளிக்கின்றன. இது அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதால், இந்தியாவில் கிடைக்கும் மிகவும் நடைமுறைக்கு உகந்த செயல்திறன் கொண்ட கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.50.91 லட்சம் ஆகும். இது லிட்டருக்கு சுமார் 16.34 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்

செயல்திறனைப் போலவே நடைமுறைப் பயன்பாடும் முக்கியம் என்றால், ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் இன்னும் சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த செயல்திறன் மிக்க செடான், 265 பிஎஸ் மற்றும் 370 என்எம் ஆற்றலை வழங்கும் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. 7 ஸ்பீட் டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. வழக்கமான ஸ்போர்ட்ஸ் காரைப் போலல்லாமல், ஆக்டேவியா ஆர்எஸ் ஒரு குடும்ப செடானில் எதிர்பார்க்கப்படும் இடவசதியையும் நீண்ட தூரப் பயணப் பயன்பாட்டையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 49.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது லிட்டருக்கு சுமார் 15.81 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. ஹோண்டா சிட்டி

இந்தப் பட்டியலில் உள்ள கார்களிலேயே ஹோண்டா சிட்டிதான் மிகவும் விவேகமான ஆப்ஷனாகும். அன்றாடப் பயன்பாட்டிற்காக மட்டுமே ஒரு SUV வாங்குவதைத் தவிர்ப்பதற்கான மிக வலுவான காரணமாகவும் இது விளங்குகிறது. 2026 ஹோண்டா சிட்டியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 11.99 லட்சத்தில் தொடங்குகிறது. 1.5-லிட்டர் i-VTEC DOHC பெட்ரோல் இன்ஜினானது 121 PS மற்றும் 145 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீட் மேனுவல் அல்லது CVT ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒரு SUV-க்குரிய கூடுதல் பருமனையும் உயரத்தையும் கொண்டிராமல், விசாலமான கேபின், பெரிய பூட் மற்றும் வசதியான ஓட்டுநர் நிலையை சிட்டி மாடல் வழங்குகிறது. கரடுமுரடான சாலைகளைக் காட்டிலும், பெரும்பாலும் நகரங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் வாகனம் ஓட்டும் வாங்குபவர்களுக்கு, வசதியான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற ஒரு குடும்ப காரைப் பெறுவதற்கு SUV அவசியமில்லை என்பதை ஹோண்டா சிட்டி உணர்த்துகிறது. இது லிட்டருக்கு சுமார் 18 முதல் 27 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்

4. ஹுண்டாய் வெர்னா டர்போ

ஹுண்டாய் வெர்னா டர்போ மிகவும் பழக்கமான செடான் வடிவமைப்பைக் கொண்டு, செயல்திறனை மையமாகக் கொண்ட எஸ்யுவி-க்கு ஒரு உண்மையான மாற்றாக அமையும் அளவிற்குப் போதுமான செயல்திறனைச் சேர்த்துள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் அல்லது 7 ஸ்பீட் டூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன், 1.5-லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் 160 பிஎஸ் மற்றும் 253 என்எம் ஆற்றலை உருவாக்குகிறது. டர்போ-பெட்ரோல் வேரியண்டின் 6-ஸ்பீட் மேனுவல் மாடலின் தொடக்க விலை ரூ.16.28 லட்சமாகவும், 7-ஸ்பீட் DCT மாடலின் விலை ரூ.17.62 லட்சமாகவும் தொடங்குகிறது. சக்திவாய்ந்த இன்ஜின் மற்றும் அம்சங்கள் நிறைந்த கேபின் ஆகியவற்றை விரும்பி SUV வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, வெர்னா டர்போ அதே குணங்களில் பலவற்றை குறைந்த எடை மற்றும் உயரங்களை கொண்டே வழங்குகிறது. இது லிட்டருக்கு சுமார் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
PulseNews சுருக்கம்

இந்தியாவில் கார் வாங்குபவர்கள் எஸ்யுவி ரக வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த வகை கார்களின் வசதியான இருக்கை அமைப்பு, கம்பீரமான தோற்றம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பு போன்றவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முக்கிய காரணங்களாக உள்ளன.

இருப்பினும், எஸ்யுவிகளுக்கு இணையாக சிறப்பான அம்சங்களைக் கொண்ட 4 கார் மாடல்கள் குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார்கள் விலை, மைலேஜ் மற்றும் வசதிகளில் எஸ்யுவிகளுக்கு கடும் போட்டியாக விளங்குகின்றன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology