35 டிபி ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் 6.0: நத்திங்கின் புதிய சிஎம்எப் பட்ஸ் சிறப்பம்சங்கள் என்ன?
இந்திய சந்தையில் நத்திங்கின் துணை பிராண்டான சிஎம்எஃப்-ன் 'சிஎம்எப் பட்ஸ் நியோ' (CMF Buds Neo) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), கேமிங்கிற்கான குறைந்த லேட்டன்சி, 52 மணி நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களுடன் இந்த இயர்பட்ஸ் களமிறங்கியுள்ளது. சிஎம்எப் பட்ஸ் நியோவில் டைட்டானியம்-கோடெட் பிஇடி டோம் (Titanium Coated PET Dome) கொண்ட 12.4 மிமீ டைனாமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜியோமெட்ரிக் ஸ்குவார் (Geometric Square) டிசைனில் சார்ஜிங் கேஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் v6.0 கனெக்டிவிட்டி வசதியுடன் AAC மற்றும் SBC ஆடியோ கோடெக் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் ஃபாஸ்ட்பேர் (Google Fast Pair), மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர் (Microsoft Swift Pair) சப்போர்ட் உள்ளது. இதனை ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் ஐஓஎஸ் 13 அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ் கொண்ட இயங்குதளங்களில் தடையின்றிப் பயன்படுத்தலாம். கஸ்டம் ஈகியூ (Custom EQ), ஸ்டாடிக் ஸ்பாஷியல் ஆடியோ (Static Spatial Audio) மற்றும் 35dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) சப்போர்ட் உள்ளது. தெளிவான வாய்ஸ் கால்களுக்காக என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் 'கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி' கொண்ட 4 மைக்குகள் (ஒவ்வொரு பட்டிலும் தலா 2 மைக்குகள்) பொருத்தப்பட்டுள்ளன. டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, டச் கன்ட்ரோல்கள், சிறந்த கேமிங் அனுபவத்திற்காக அல்ட்ரா லோவ் லேட்டன்சி கொண்ட கேமிங் மோட் மற்றும் நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) சப்போர்ட் ஆகியவையும் இதில் அடங்கும். இயர்பட்களில் 45mAh பேட்டரியும், சார்ஜிங் கேஸில் 460mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளன. ஏஎன்சி (ANC) ஆஃப்-ல் இருக்கும்போது இயர்பட்கள் 11 மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 52 மணி நேரமும் பேக்கப் தரும். ஏஎன்சி ஆன் செய்யப்பட்டிருக்கும் போது (On), இயர்பட்கள் 8 மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் சேர்த்து 30 மணி நேரமும் பேக்கப் வழங்கும். டைப்-சி வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்ட இதில், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 5.5 மணி நேரங்கள் வரை தடையின்றிப் பயன்படுத்த முடியும். இயர்பட்களுக்கு ஐபி55 ரேட்டிங் கொண்ட தூசு மற்றும் நீர் எதிர்ப்புத் திறனும் (Dust & Water Resistance), சார்ஜிங் கேஸுக்கு IPX2 ரேட்டிங் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் டார்க் ப்ளூ (Dark Blue) ஆகிய 3 கவர்ச்சிகரமான நிறங்களில் கிடைக்கிறது. விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக.26-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) தளம் மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டான சிஎம்எஃப், இந்திய சந்தையில் புதிய 'சிஎம்எப் பட்ஸ் நியோ' இயர்பட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் 35 டிபி ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் 6.0 தொழில்நுட்பம் மற்றும் 12.4 மிமீ டைட்டானியம் கோட்டட் பிஇடி டோம் டைனாமிக் டிரைவர்களைக் கொண்டுள்ளது.
கேமிங் பயன்பாட்டிற்கான குறைந்த லேட்டன்சி வசதி மற்றும் 52 மணிநேர பேட்டரி பேக்கப் ஆகிய சிறப்பம்சங்களை இது வழங்குகிறது. ஜியோமெட்ரிக் ஸ்குவார் வடிவமைப்பில் இந்த புதிய இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.