PulseNews
தொழில்நுட்பம்

இன்றே கடைசி நாள்...! சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் இந்த சரிபார்ப்பை செய்ய மறக்காதீர்கள்...!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகளில் வாடிக்கையாளர் விவரங்களை உறுதிப்படுத்தும் மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்வதற்கான காலக்கெடு இன்று ஆகஸ்ட் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நடைமுறையை முடிக்காமல் காலக்கெடுவை தவறவிடும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களது எரிவாயு இணைப்புக்கான மின்னணு சரிபார்ப்பை உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முறைகேடான எரிவாயு இணைப்புகளை கண்டறிதல், ஒரே நபர் பெயரில் உள்ள பல்வேறு இணைப்புகளை கண்காணித்தல் மற்றும் அரசின் மானியம் தகுதியான பயனாளிகளுக்கு முறையாக சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிபார்ப்பை நிறைவு செய்யாத இணைப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இதனால் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் பெறுவதிலும், மானியத் தொகையைப் பெறுவதிலும் சிக்கல் உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசின் சமையல் எரிவாயு மானியம் தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் விவரங்கள் முறையாக உறுதிப்படுத்தப்படாமல் இருந்தால், மானியப் பணம் கிடைப்பதில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது இணைப்பின் சரிபார்ப்பு நிலை தொடர்பான காரணங்களால் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்துக்குச் சென்று, ஆதார் அட்டை உள்ளிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.கைரேகை மற்றும் விழித்திரை பதிவு உள்ளிட்ட முறைகளிலும் வாடிக்கையாளர் விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதுதவிர, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கைப்பேசி செயலி வாயிலாகவும், ஆதார் முக அடையாளச் சரிபார்ப்பு வசதியைப் பயன்படுத்தியும் வீட்டிலிருந்தபடியே இணையவழியில் சரிபார்ப்பை மேற்கொள்ளும் வசதி உள்ளது. காலக்கெடு முடிவடையும் நிலையில், விநியோகஸ்தர் அலுவலகங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வாடிக்கையாளர்கள் தங்களது சரிபார்ப்பு நிலையை உடனடியாக உறுதி செய்து கொள்ள வேண்டும். சமையல் எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கும், தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் மானியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வாடிக்கையாளர்கள் தங்களது மின்னணு சரிபார்ப்பை விரைவாக நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Seithipunal16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இன்றே கடைசி நாள்...! சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் இந்த சரிபார்ப்பை செய்ய மறக்காதீர்கள்...!
PulseNews சுருக்கம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், தங்கள் விவரங்களை உறுதி செய்வதற்கான மின்னணு சரிபார்ப்புப் பணியை முடிப்பதற்கு இன்று ஆகஸ்ட் 23-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த நடைமுறையை கட்டாயம் முடிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரிபார்ப்பை மேற்கொள்ளத் தவறினால், வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் மானியம் பாதிக்கப்படலாம். மேலும், எதிர்காலத்தில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதிலும் சிரமங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology