PulseNews
தொழில்நுட்பம்

சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களிலே மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார பைக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய இ பைக் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக கால்தடம் பதித்திருக்கும் நிறுவனம் Avore. இவர்களின் இ பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1.Avore EX2:

இந்த பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 56 ஆயிரத்து 683. இதில் 5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 255 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும். 154 கிலோ எடை கொண்டது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

2. Avore EX2S:

இந்த அவோரா பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 77 ஆயிரத்து 106 ஆகும். இதில் 5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் வரை ஆகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 260 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 114 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும். முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர், 5 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது.

3. Avore EX1:

அவோரா நிறுவனத்தின் மற்றொரு இ பைக் இந்த Avore EX1. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 31 ஆயிரத்து 154. இதில் 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது. ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 250 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

இந்த 3 இ பைக்குகளிலும் சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

எல்சிடி டிஸ்ப்ளே, ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி, லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி, ஹை பீம் இண்டிகேட்டர், நேரம் பார்க்கும் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி, சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் வித் பார்க்கிங் அசிஸ்ட் வசதி உள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
PulseNews சுருக்கம்

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இ-பைக் சந்தையில் அவோர் (Avore) நிறுவனம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

அவோர் நிறுவனத்தின் EX2 என்ற மாடல் ஒரே ஒரு வேரியண்டில் கிடைக்கிறது. இந்த மின்சார பைக் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 260 கிலோமீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology