புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்கள் டிஜிட்டல் நாணய முறைக்கு மாறவேண்டும்..!
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்கள் டிஜிட்டல் நாணய முறைக்கு மாறாவிட்டால், அவர்களுக்கான உணவு தானிய மானியம் நிறுத்தி வைக்கப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. இதுவரை நடைபெற்ற முகாம்களில் கலந்து கொண்டு தங்களது அலைபேசி எண்ணை இணைத்துக் கொள்ளாத பயனாளிகள், வரும் 21-ஆம் தேதிக்குள் தங்களது தொடர்புடைய நியாயவிலைக் கடைக்குச் சென்று, அலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் நாணய முறையில் உணவு தானிய மானியத்தை தொடர்ந்து பெறுமாறு பயனாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், கட்டாயமாக டிஜிட்டல் நாணய முறைக்கு மாற வேண்டும் என குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தைச் செய்யத் தவறினால், அவர்களுக்கான உணவு தானிய மானியம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடைபெற்ற முகாம்களில் பங்கேற்காத பயனாளிகள், வரும் 21-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதி நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். இந்த நடைமுறையைச் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே டிஜிட்டல் நாணய முறைக்கு மாற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.