PulseNews
தொழில்நுட்பம்

தென் மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்! 14 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாராந்திர 14 சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்த தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தாம்பரத்திலிருந்து போடி நாயக்கனூருக்கு செல்லும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06059) வரும் செப்.12 முதல் 26-ஆம் தேதி வரையிலும், போடிநாயக்கனூா்-தாம்பரம் இடையேயான வாராந்திர விரைவு ரயில் (எண்: 06060) செப்.13 முதல் 27-ஆம் தேதி வரையிலும், சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி (வெள்ளிக்கிழமை) விரைவு ரயில் (எண்: 06045) செப்.4 முதல் 25-ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி- எழும்பூா் நிலையம் வரையில் (ஞாயிற்றுக்கிழமை) விரைவு ரயில் (எண்: 06046) செப்.6 முதல் 27-ஆம் தேதி வரையிலும், மங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரயில் (எண்: 06126) வரும் செப். 7 முதல் 28- ஆம் தேதி வரையிலும் சென்னை எழும்பூா்-மங்களூரு இடையிலான விரைவு ரயில் (எண்: 06125) மற்றும் போதனூா்-சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரயில் (எண்: 06028) ஆகியவை செப்.8 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (எண்: 06030) செப்.6 முதல் 27-ஆம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி விரைவு ரயில் (எண்: 06029) செப்.7 முதல் 28 ஆம் தேதி வரையிலும், திருநெல்வேலி-தாம்பரம் விரைவு ரயில் (எண்: 06166) செப்.6 முதல் 27-ஆம் தேதி வரையிலும், திருநெல்வேலி- தாம்பரம் விரைவு ரயில் (எண்: 06070) செப்.3 முதல் 24-ஆம் தேதி வரையிலும், தாம்பரம்-திருநெல்வேலி விரைவு ரயில் (எண்: 06069) செப்.4 முதல் வரும் 25-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தென் மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்! 14 சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே..
PulseNews சுருக்கம்

தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது இயக்கப்பட்டு வரும் 14 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து இந்திய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் சேவையானது நாட்டின் மிக முக்கியமான போக்குவரத்து வசதியாக உள்ளது. தினசரி 19,000 ரயில்கள் மூலம் சுமார் 4 கோடி பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்களின் நீட்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology