Today Top 10 News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கானோர் நேரில் கண்டு களித்தனர். “சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக செங்கோட்டையிலிருந்து வந்தே மாதரம் ஒலிப்பதாக பெருமையுடன் கூறிய பிரதமர் மோடி, இந்தியா ஒரு வளர்ந்த தேசம். அதனால் பெரிய கனவுகளைக் காணுங்கள், மிகப்பெரிய அளவில் உறுதிமொழிகளை எடுங்கள் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் பெரிய கனவுகள் மக்களின் சிந்தனையை விரிவுபடுத்தி, அவர்களின் பார்வையைத் தெளிவுபடுத்தும். உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு வளர்ந்த நாடாக மாறும்போது, உலகம் இந்தியாவை வேறு விதமாகப் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். கடந்த 12 ஆண்டுகளில்பாதுகாப்பு உற்பத்தி நான்கு மடங்காகவும், காதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்துள்ளது. மேலும் கைபேசி உற்பத்தி 33% அதிகரித்துள்ளதாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்

CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் பிரபலங்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.

வெளியான முக்கிய அறிவிப்புகள்
முன்னாள் படைவீரர்களின் நலன் கருதி அவர்களின் இரண்டு மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதியுதவி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்கள் அல்லது அவர்கள் சார்ந்தோருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தப்படும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி வழித்தோன்றதலுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தப்படும். இவற்றிற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி அதிரடி பேட்டி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது தாயார் சரஸ்வதி அம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற வருகை புரிந்தார் அப்போது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர்தமிழ்நாட்டிற்கு இன்னும் மதுவில் இருந்து விடுதலை கிடைக்கவில்லை; சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வியடையும்; தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு 59 எம்.பி.க்கள் கிடைக்கும் என தெரிவித்தார்.

“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் குறித்து, அவரது குடும்பத்தினரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர்., “நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது மூன்றாந்தர அரசியல் அல்ல“ நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.“ என தெரிவித்துள்ளார்.

Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தென் மேற்கு பருவமழை காரணமாக கேரளாவையொட்டியுள்ள தமிழக பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதே நேரம் தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று (15-08-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு

தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் தினந்தோறும் 100 முதல் 130 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. மதுப்பிரியர்கள் குஷியில் துள்ளி குதித்த நிலையில், ஷாக் கொடுக்கும் வகையில் டாஸ்மாக்கில் 11 மதுபான வகைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அந்த தடையை நீக்கப்பட்டு மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இவ்வளவு நாள் மோசமான சரக்குகளை குடித்து வந்தோமோ என அதிர்ச்சியில் இருந்த நிலையில், தற்போது அந்த 11 மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Source: Read Full Article

இன்றைய வேகமான உலகில் மக்கள் செய்திகளைத் திரையில் விரைவாக அறிந்துகொள்ள விரும்புகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, ஏபிபி நாடு தளம் அன்றைய மிக முக்கியமான நிகழ்வுகளை மட்டும் சுருக்கமாகத் தொகுத்து வழங்குகிறது.
தினமும் இந்த முக்கியச் செய்திகளைப் படிப்பதன் மூலம், நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளைத் தவறவிடாமல் உங்களால் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.