இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோட இருப்போம்... மேப்பில் இருந்து அழியப் போகும் நாடு; ஆனா இணையத்துல கோடி கோடியா சம்பாதிக்குது
உலகிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் வாட்டிகனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது துவாலு (Tuvalu) தான். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு நாடு, இயற்கை அளித்த பேரழகைக் கொண்டிருந்தாலும், காலநிலை மாற்றத்தின் கொடூர காரணங்களால் மிக விரைவாக கடலுக்குள் மூழ்கி வரும் ஆபத்தைச் சந்தித்து வருகிறது. எகிப்தில் தோண்ட தோண்ட அதிர்ச்சி... பைபிளில் சொல்லப்பட்ட 'கோஷேன் நகரம்' உண்மையா? 3,000 வருஷமா புதைந்து கிடந்த உலகம் ஓடுபாதையே விளையாட்டு மைதானம் துவாலு நாட்டின் மொத்த நிலப்பரப்பே வெறும் 25.14 சதுர கிலோமீட்டர் மட்டுமே. இத்தீவு எந்த அளவிற்குச் சிறியது என்றால், தலைநகரான ஃபனாஃபுட்டியில் (Funafuti) உள்ள விமான நிலையத்தின் ஒரே ஒரு ஓடுபாதைதான் அங்குள்ள குழந்தைகளுக்குக் கால்பந்து விளையாடும் மைதானமாகவும், மாலையில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும் பயன்படுகிறது. தனி மைதானம் அமைக்க நிலம் இல்லாததால், விமானங்கள் வராத நேரங்களில் இந்த ஓடுபாதையே நாட்டின் மிகப்பெரிய பொதுவிடமாக மாறுகிறது. கடலுக்குள் மூழ்கும் ஆபத்து - புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன? பவளத்தீவுகளின் தொகுப்பான துவாலுவின் மிக உயர்ந்த பகுதியே கடல் மட்டத்திலிருந்து வெறும் 4.6 மீட்டர் உயரத்தில் தான் அமைந்துள்ளது. ஃபனாஃபுட்டி கடல் அலைமானித் தரவுகளின்படி, இங்கு கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 3.9 மில்லி மீட்டர் என்ற அளவில் உயர்ந்து வருகிறது. இது உலகளாவிய சராசரி உயர்வை விட இரண்டு மடங்கு வேகமாகும். கடந்த நூற்றாண்டில் உலகளவில் கடல் மட்டம் 0.2 மீட்டர் உயர்ந்துள்ளது. இருப்பினும், துவாலு போன்ற தாழ்வான தீவுகளில் அடுத்த 100 ஆண்டுகளில் 20 முதல் 40 சென்டிமீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்தால் கூட, மனிதர்கள் வாழவே முடியாத நிலையாக அது மாறிவிடும். கடலோர அரிப்பு மற்றும் நன்னீரில் கடல்நீர் கலப்பது போன்ற காரணங்களால், இத்தீவுக்கூட்டத்தின் இரண்டு முக்கியத் தீவுகள் ஏற்கனவே நீரில் மூழ்கும் விளிம்பிற்குச் சென்றுவிட்டதாக அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு தாக்கிய 'பாம்' சூறாவளி, நாட்டின் 90% விவசாயப் பயிர்களை அழித்ததுடன், அங்கிருந்த 45% மக்களை வீடு இழந்து இடம்பெயரச் செய்தது. மக்கள் தொகை மற்றும் வாழ்க்கை முறை துவாலு நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாலினேசிய (Polynesian) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பெண்களின் சராசரி ஆயுட்காலம் 70.2 ஆண்டுகள்; ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 65.6 ஆண்டுகள். நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 0.86% ஆக உள்ளது. இருப்பினும், குடியேற்ற விகிதம் எதிர்மறையாக உள்ளது. அதாவது, 1,000 பேருக்கு சுமார் 6.6 பேர் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். நாட்டின் பொருளாதாரமும், டொமைன் ரகசியமும் துவாலு நாட்டின் பொருளாதாரம் பிரதானமாக மீன்பிடித்தல், வெளிநாட்டு உதவிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் துவாலு மக்கள் அனுப்பும் பணத்தைச் சார்ந்தே இயங்குகிறது. இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இணையதளங்களுக்கு வழங்கப்படும் டிவி என்ற நாட்டுக்கான டொமைன் குறியீடு துவாலுவிற்கே சொந்தமானது. உலகெங்கிலும் உள்ள தொலைக்காட்சி மற்றும் வீடியோ நிறுவனங்களுக்கு இந்த டி.வி டொமைனை உரிமம் தருவதன் மூலம் கணிசமான வருமானத்தை இந்நாடு ஈட்டுகிறது. உலகின் மிகக் குறைந்த சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருந்தாலும், புவியியல் அமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருப்பதால், உலகிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடாகத் துவாலு உள்ளது. உலகின் முதல் டிஜிட்டல் நாடு நாடு கடலுக்குள் மூழ்கினாலும், தங்களின் கலாச்சாரம், இறையாண்மை மற்றும் வரலாற்று நினைவுகளை அழியாமல் காப்பாற்ற, துவாலு அரசு தன் நாட்டையே 'மெட்டாவர்ஸ்' (Metaverse) தொழில்நுட்பம் மூலம் முழுமையான டிஜிட்டல் நாடாக (Digital Twin) மாற்றும் முன்னோடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள துவாலு என்ற சிறிய தீவு நாடு, காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து வருவதால், வரும் காலங்களில் முழுமையாக நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. 25.14 சதுர கிலோமீட்டர் மட்டுமே நிலப்பரப்பு கொண்ட இந்த நாட்டில், போதிய இடவசதி இல்லாததால் விமான ஓடுபாதையே குழந்தைகளின் விளையாட்டு மைதானமாகவும், மக்களின் நடைப்பயிற்சி இடமாகவும் பயன்படுகிறது. கடல் நீர் மட்டம் உயர்வால் ஏற்கனவே நாட்டின் இரு தீவுகள் மூழ்கும் விளிம்பில் உள்ள நிலையில், 2015-ஆம் ஆண்டு தாக்கிய 'பாம்' சூறாவளி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
குறைந்த சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடாக இருந்தாலும், தனது நாட்டின் இணைய டொமைன் குறியீடான '.tv'-ஐ உலக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதன் மூலம் துவாலு கணிசமான வருமானம் ஈட்டுகிறது. எதிர்காலத்தில் நாடு கடல்நீரில் மூழ்கினாலும், தனது கலாச்சாரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக, மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துவாலு தன்னை உலகின் முதல் டிஜிட்டல் நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.