PulseNews
தொழில்நுட்பம்

Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்

Skoda Superb: ஸ்கோடாவின் சூப்பர்ப் கார் மாடல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்கோடா சூப்பர்ப் கார் மாடல்

சர்வதே சந்தையில் விற்பனையில் உள்ள சூப்பர்ப் மாடலானது, ஸ்கோடாவின் லைன் - அப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கார் மாடல்களில் ஒன்றாகும். மிகச்சிறந்த கேபின் அனுபவத்தையும், கவனத்தை ஈரக்க்கூடிய எரிபொருள் செயல்திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பையும் கொண்டுள்ளது, சிறந்த காருக்கான உரிமையாளர் என்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்நிலையில், இந்த காரின் புதிய தலைமுறையை அறிமுகம் செய்வதற்கான டைம்லைனை ஸ்கோடா உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை கிடைத்துள்ள அத்தனை விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்கோடா சூப்பர்ப் வெளியீடு எப்போது?

ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதிலும், ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களை மேம்படுத்துவதிலும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, 2027ம் ஆண்டின் முதல் பாதியில் சூப்பர்ப் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஸ்கோடா எக்ஸ்பீரியன்ஸ் 2026 நிகழ்வில், செக் குடியரசைச் சேர்ந்த இந்த கார் தயாரிப்பு நிறுவனம், 2027ம் ஆண்டுக்கான தனது திட்டத்தின் சில குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கோடாவின் 2026ம் ஆண்டிற்கான திட்டங்களில் மிகவு முக்கியமானதாக, ஆண்டின் இறுதியில் சூப்பர்ப் மாடல் மீண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது தாமதப்படுத்தப்பட்டு 2027ம் ஆண்டின் முதல் பாதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனம், சூப்பர்ப் காரை லிமிடெட் எடிஷனாக, முழுமையாகத் தயாரிக்கப்பட்ட வாகனமாக (CBU) அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா சூப்பர்ப் - அம்சங்கள், வசதிகள்:

ஸ்கோடாவின் ஃப்ளாக்‌ஷீப் செடான் காரான சூப்பர்ப் மாடல், ஆடம்பரமான மற்றும் வசதியான கேபினுடன் ஏராளமான அம்சங்களையும் தொழில்நுட்பத்தையும் வழஙங்குகிறது. லெவல்-2 ADAS சூட், 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் கூடிய 13-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன், 15-ஸ்பீக்கர் கேன்டன் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், மசாஜ் வசதியுடன் கூடிய வெண்டிலேடட் மற்றும் பவர்டு முன் இருக்கைகள், 10.25-இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பல அம்சங்களை சூப்பர்ப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடா சூப்பர்ப் - 40KM மைலேஜ்

சூப்பர்ப் மாடலின் மிகவும் முக்கியமான அம்சம் அதன் பவர்டிரெய்னான டீசல் இன்ஜின் ஆகும். இது மிகவும் எரிபொருள் சிக்கனமான மாடல்களில் ஒன்றாகும். சோதனையின் போது இந்த மாடல் லிட்டருக்கு 40 கி.மீ. மைலேஜ் வழங்கி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் மாடலைப் போலவே, இந்தியாவிற்கான மாடலிலும் 2.0-லிட்டர் டீசல் இன்ஜின் இரண்டு விதமான ட்யூனிங் நிலைகளில் கிடைக்கலாம். ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் உடன் உடன் 148 bhp மற்றும் 360 Nm டார்க், அல்லது ஆல் வீல் ட்ரைவ் உடன் 190 bhp மற்றும் 400 Nm டார்க் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

இதையும் படியுங்கள்: Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

ஸ்கோடா சூப்பர்ப் - விலை விவரங்கள்

முற்றிலும் கட்டமைக்கப்பட்ட ஒரு யூனிட்டாக இருக்கும் என்பதால், சூப்பர்ப் காரின் விலை ரூ. 60 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். தற்போது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) அமலில் இருப்பதால், அறிமுகத்தின் போது இந்த விலை குறைவாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள இந்த கார், உள்ளூர் சந்தையில் டொயோட்டாவின் கேம்ரி உடன் நேரடியாக போட்டியிடும்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
PulseNews சுருக்கம்

சர்வதேச சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஸ்கோடா சூப்பர்ப் கார் மாடல், இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளதாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கார் தனது நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறப்பான உட்புற வசதிகளுக்காக அறியப்படுகிறது.

மேலும், இந்த சூப்பர்ப் மாடல் 40 கி.மீ மைலேஜ் வழங்கும் திறனைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்கோடாவின் இந்த கார், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology