அப்டேட்டாகி வந்த பொல்லாதவன்.. அறிமுகமாகியது New Gen Bajaj Pulsar 150 பைக்! விலை எவ்ளோ?

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று பஜாஜ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் இரு சக்கர வாகனங்களில் மிகவும் பிரபலமான பைக் பஜாஜ்.

New-Gen Bajaj Pulsar 150:

இந்த பைக்கின் புதிய அப்டேட்டாக இந்திய சந்தையில் இன்று அறிமுகமாகியிருப்பது New-Gen Bajaj Pulsar 150. இதில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. எஸ்டி மற்றும் டிடி என இரண்டு வேரியண்ட் உள்ளது. 14 பிஎஸ் ஆற்றல் கொண்டது.

1. SD - ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரத்து 368

2. TD – Single Seat - ரூபாய் 1 லட்சத்து 45 ஆயிரத்து 286

3. TD – Split Seat - ரூபாய் 1 லட்சத்து 46 ஆயிரத்து 429

இதில் ரோட், ரெயின், ஸ்போர்ட் ஆகிய 3 வேரியண்ட்கள் உள்ளது.

வசதிகள்:

149.5 சிசி எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 14.1 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5 கியர்கள் கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 260 மி.மீட்டர் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் 130 மி.மீட்டர் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்ட வேரியண்டும் உள்ளது. 230 மி.மீட்டர் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்ட வேரியண்டும் உள்ளது.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் முன்பக்கம் சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் நேவிகேஷன் வசதி உள்ளது. எல்இடி ப்ளிங்கர்ஸ் மற்றும் டைப் சி வசதி உள்ளது.

சிறப்புகள்:

5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் லைட் சுவிட்ச், ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பல்சர் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்திய சந்தையில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த புதிய வரவு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

1 கியர் கீழேவும், மற்ற 4 கியர்கள் மேலேவும் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 45 முதல் 50 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், தனது மிகவும் பிரபலமான பல்சர் 150 பைக்கின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய பல்சர் 150 மாடல் எஸ்டி (SD) மற்றும் டிடி (DD) என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. 14 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.