PulseNews
தொழில்நுட்பம்

முதல்முறை எம்.எல்.ஏ.-க்களுக்கு அரசு சார்பில் புதிய கார் மற்றும் உதவியாளர் வசதி: விஜய் முடிவு

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) புதிய கார் மற்றும் உதவியாளரை (Assistant) வழங்க அரசு தீவிரமாக பரிசீலித்து முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத்தில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களின் போது பேசிய வி.சி.க. எம்.எல்.ஏ. ஜோதிமணி. "எனக்கு சொந்தமாகப் பொருளாதார வசதி கிடையாது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் மிகவும் பெரியவையாக இருக்கும் நிலையில், தொகுதி முழுவதும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான கார் வசதியும் அதற்கான நிதிப் பின்புலமும் என்னிடம் இல்லை. என்னைப் போலவே சட்டப்பேரவையில் உள்ள பல முதல்முறை எம்.எல்.ஏ.-க்கள் இதே பொருளாதாரச் சூழலில்தான் இருக்கிறார்கள். எனவே, மக்களுக்காக திறம்பட பணியாற்ற தொகுதி தோறும் எம்.எல்.ஏ.-க்களுக்குக் கார் வசதியும், ஒரு உதவியாளரும் அரசு சார்பில் வழங்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை நியாயமான முறையில் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பரிசீலிக்கப்படும் என்று பேரவையிலேயே சபாநாயகர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் நிதிநிலையை விரிவாக ஆராய்ந்து, முதல்முறை உறுப்பினர்களின் பணிச் சுமையை எளிதாக்கும் வகையில், இக்கோரிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஒவ்வொரு முதல்முறை எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கும் தொகுதி ஆய்வுப் பணிகளுக்காகக் கார் வசதி செய்து தரப்படும். மக்கள் கோரிக்கைகளை உடனடியாகக் கையாளவும் அலுவலகப் பணிகளைச் சீரமைக்கவும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசு சார்பில் ஒரு உதவியாளர் (Assistant) நியமிக்கப்படுவார். நிதிநிலை ஆய்வுக்குப் பின், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Indian Express17 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதல்முறை எம்.எல்.ஏ.-க்களுக்கு அரசு சார்பில் புதிய கார் மற்றும் உதவியாளர் வசதி: விஜய் முடிவு
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு புதிய கார் மற்றும் உதவியாளர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த முக்கிய நடவடிக்கைகளை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, ஜோதிமணி எம்.எல்.ஏ. தனது தொகுதி பெரியதாக இருப்பதாலும், தனக்கு போதிய பொருளாதார வசதி இல்லாததாலும் இத்தகைய வசதிகள் தேவை என வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology