Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

Maruti Suzuki Upcoming SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி அறிமுகப்படுத்த உள்ள புதிய எஸ்யுவி கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

7 புதிய எஸ்யுவிக்கள் - மாருதி அதிரடி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரும், விற்பனையாளருமான மாருதி சுசூகி தனது எஸ்யுவி போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 7 புதிய எஸ்யுவிக்களை களமிறக்க உள்ளதாம். வரவிருக்கும் லைன் - அப்களானது பெட்ரோல், சிஎன்ஜி, பெட்ரோல், ஹைப்ரிட் மின்சாரம், ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் போன்ற பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை கொண்ட, முற்றிலும் புதிய மாடல்கள் மற்றும் ஃபேஸாலிஃப்ட் எஸ்யுவிக்களாக இருக்குமாம். இந்தோ ஜப்பானிய வாகன ப்ராண்டாப்னது, பல்வேறு புதிய மாடல்கள், பல்திறன் கொண்ட உத்தி, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட கவனம் செலுத்தி ஆண்டுக்கு 30 லட்சம் யூனிட் விற்பனையை இலக்காக நிர்ணயித்துள்ளது.

மாருதியின் விரிவாக்க திட்டம்

மாருதி சுசூகி நிறுவனம் இந்தியா முழுவதும் தனது உற்பத்தித் திறன், கிடங்குகள் மற்றும் உதிரிபாகங்கள் விநியோக மையங்களை விரிவுபடுத்த உள்ளது. 2026-2027 நிதியாண்டில் ஹரியானாவின் கார்கோடா மற்றும் குஜராத்தின் ஹன்சல்பூர் ஆகிய இடங்களில் உள்ள தனது ஆலைகளை விரிவாக்குவதன் மூலம், தனது உற்பத்தித் திறனை கூடுதலாக 5 லட்சம் யூனிட்களுக்கு அதிகரிக்க உள்ளது. இதனிடையே, குஜராத்தின் சனந்தில் உள்ள கோராஜ் தொழிற்பேட்டையில், ஆண்டுக்கு ஒரு மில்லியன் யூனிட்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஒரு புதிய கிரீன்ஃபீல்டு உற்பத்தி ஆலையையும் அமைத்து வருகிறது.

மாருதியின் திட்டத்தில் உள்ள மாடல்கள் என்ன?

மாருதி சுசூகி நிறுவனம், அடுத்தடுத்து சந்தைப்படுத்த உள்ள எஸ்யுவிகளின் பெயர்களையும் விவரங்களையும் இன்னும் வெளியிடவில்லை. அதேநேரம் இந்த வரிசையில் ஒரு புதிய சப்-4 மீட்டர் எஸ்யுவி, க்ராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட 7 சீட்டர் கொண்ட எஸ்யயுவி, க்ராண்ட் விட்டாரா ஃபேஸ்லிஃப்ட், ஃப்ராங்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஜிம்னி ஃபேஸ்லிஃப்ட் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அப்க்ரேடாக, மாருதி சுசூகி நிறுவனம், முற்றிலும் புதிதாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு வலிமையான ஹைப்ரிட் பவர்ட்ரெய்னை (HEV என்ற கோட்நேம்) அறிமுகப்படுத்த உள்ளது. இது 2027-ஆம் ஆண்டில் ஃப்ராங்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்

அறிக்கைகளின்படி, புதிய மாருதி ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டம் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும், இது ஒரு லிட்டருக்கு 35 கி.மீ. வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு சீரிஸ் ஹைப்ரிட் அமைப்பாக இருக்கும் என்றும், தற்போது கிராண்ட் விட்டாரா, விக்டோரிஸ் மற்றும் இன்விக்டோ கார்களில் பயன்படுத்தப்படும் டொயோட்டாவின் அட்கின்சன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னை விட இது குறிப்பிடத்தக்க அளவில் அதிக சிக்கனமாகவும் திறமையாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மாருதி சுசுகி, டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களுக்குப் போட்டியாக, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய எஸ்யூவி (Y43 என்ற குறியீட்டுப் பெயர்) ஒன்றையும் உருவாக்கி வருகிறது. இது இக்னிஸ் காருக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும். வரவிருக்கும் இந்த மாருதி மினி-எஸ்யூவியில், ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் இருந்து பெறப்பட்ட 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிஎன்ஜி பவர்டிரெய்ன் தேர்வுடனும் வழங்கப்படலாம்.

இந்திய வாகனச் சந்தையின் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி, தனது எஸ்யுவி ரக கார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஏழு புதிய எஸ்யுவி மாடல்களை அறிமுகப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வரவிருக்கும் இந்த புதிய கார்கள் வரிசையில் ஏழு இருக்கைகள் கொண்ட வாகனங்கள், ஹைப்ரிட், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகிய தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மாடல்கள் இடம் பெறவுள்ளன.