இதுதான்யா அப்டேட்... TVS iQube இ ஸ்கூட்டர் பேஸ் வேரியண்டில் அதிரடி மாற்றம்! இனி மைலேஜ் எவ்ளோ தெரியுமா?

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான இ ஸ்கூட்டர் TVS iQube.

புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்:

இதன் அடிப்படை வேரியண்ட் 2.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்டாக பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது, இது 2.3 கிலோவாட் பேட்டரியாக மாற்றப்பட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 94 கிலோமீட்டர் மைலேஜ் அளித்தது. இந்த புதிய 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 114 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாப் ஸ்பீட்:

முன்பிருந்த பிஎல்டிசி ஹப் மோட்டாரே இந்த வேரியண்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. 140 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 4.7 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. அதிகபட்சமாக 68 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை சார்ஜ் செய்வதற்கு 2.5 மணி நேரம் ஆகிறது. கிரேடிபிளிட்டி 10 டிகிரி ஆகும்.

இதில் லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ரேட்டிங் ஆகும். 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. இதன் எடை 109 கிலோ ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 157 மி.மீட்டர் ஆகும். இருக்கை உயரம் 770 மி.மீட்டர் ஆகும்.

சிறப்புகள்:

டூயூபல் ஃப்ரேம், டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஹைட்ராலிக் ட்வின் ட்யூப் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 12.7 செமீட்டர் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

இதன் டிஸ்ப்ளேவில் பேட்டரி லெவல், டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி காணும் வசதிகள் உள்ளது. ப்ளூடூத் கனெக்ஷன் இருப்பதால் எஸ்எம்எஸ்/ அழைப்புகள் வந்தால் அலர்ட் செய்யும் வசதிகள் உள்ளது. டிக்கி வசதி 30 லிட்டர் ஆகும். இது வெள்ளை, அரக்கு மற்றும் சாம்பல் வண்ணங்களில் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங் வசதிகள், பார்க்கிங் ப்ரேக் வசதிகள் உள்ளது. ரிவர்ஸ்/ ஃபார்வர்ட் பார்க்கிங் அசிஸ்ட் வசதி உள்ளது.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனம் தனது பிரபலமான TVS iQube இ-ஸ்கூட்டரின் அடிப்படை மாடலில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
இதற்கு முன்பு 2.2 கிலோவாட் பேட்டரியைக் கொண்டிருந்த இந்த அடிப்படை வேரியண்ட், தற்போது மேம்படுத்தப்பட்ட 2.3 கிலோவாட் பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.