Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?

இணையதள வளர்ச்சி

நவீன காலத்தில் உள்ளங்கைக்குள் உலகம் வந்துவிட்டது. அந்த வகையில் இணையதளத்தின் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே என்ன வேண்டும் என்றாலும் ஆர்டர் செய்யலாம். விமானம் முதல் பேருந்து டிக்கெட் புக் செய்யலாம். எனவே எந்த இடத்திற்கு சென்றாலும் இணையதளம் முக்கிய தேவையாக உள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் வகையிலும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக,சென்னையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரைப் பகுதிகளான மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைப் பகுதிகளில் முதற்கட்டமாக மக்கள் தங்குதடையின்றி இணைய பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் உயர்தரத்தில் இலவச வைஃபை (WiFi) வசதிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளில் 32 இடங்களில் பயன்பாட்டில் இல்லாத இலவச வைஃபை வசதி பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலவச வைஃபை (WiFi) வசதி

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் 5 இடங்களிலும் இன்று (10.08.2026) முதல் இலவச வைஃபை (WiFi) வசதி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வைஃபை வசதியினைப் பயன்படுத்துவதற்கு மக்கள் தங்கள் செல்பேசியில் வைஃபையினை ஆன் செய்து அதனை கிளிக் செய்தவுடன் வரும் QR Codeனை மீண்டும் கிளிக் செய்தவுடன், செல்பேசி எண்ணிற்கு வரும் OTP எண்ணை இதில் பதிவு செய்தவுடன் வைஃபை இணைப்பு ஏற்படும். மக்கள் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இலவச வைஃபை (WiFi) வசதியை பெறுவது எப்படி.?

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான இதர கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள். விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பயன்பாட்டில் இல்லாத வைஃபை வசதியினை மீண்டும் பயன்பாட்டிக்குக் கொண்டு வருதல் மற்றும் புதிதாக வைஃபை (WiFI) வசதியினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு இலவச வைஃபை (Wi-Fi) வசதியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இணையதள வசதி தற்போதைய காலத்தில் அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ள நிலையில், இத்திட்டம் மக்கள் எளிதாகச் சேவைகளைப் பெற உதவும். இந்த இலவச வைஃபை இணைப்பை எவ்வாறு பெறுவது என்பது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.