Hyundai Upcoming Cars: ஹுண்டாய் களமிறக்கப்போகும் 4 கார்கள்.. என்னென்ன? இதுதான் பட்டியல்!

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவமாக திகழ்வது ஹுண்டாய். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இவர்கள் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Hyundai Compact Electric SUV:

ஹுண்டாயின் மிகவும் எதிர்பார்க்கப்படும் காராக இருப்பது இந்த Hyundai Compact Electric SUV. இந்திய சந்தையில் மின்சார கார்களுக்கு வரவேற்பு நாள்தோறும் அதிகரித்து வரும் சூழலில் இந்த கார் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த கார் இந்தாண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 12.9 இன்ச் தொடுதிரை கொண்ட டிஸ்ப்ளே, லெவல் 2 அடாஸ் வசதி கொண்டதாக இந்த கார் அறிமுகமாக உள்ளது.

2. Hyundai Bayon:

ஹுண்டாயின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கார்களில் ஒன்று இந்த Hyundai Bayon. இந்த கார் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளது. 1.5 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக அறிமுகமாக உள்ளது. பெட்ரோல் வேரியண்ட் மட்டுமின்றி சிஎன்ஜி வேரியண்டிலும் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக இந்த கார் அறிமுகப்படுத்த உள்ளது.

3.Third-gen Creta:

4.4 மீட்டர் நீளமும், 2.7 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த கார் அறிமுகமாக உள்ளது. ஹுண்டாயின் கிரெட்டா கார்களுக்கு இந்தியாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், 3வது தலைமுறை காராக இந்த Third-gen Creta கார் அறிமுகமாக உள்ளது. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக அறிமுகமாக உள்ளது.

4. Fourth-gen i10:

ஹுண்டாயின் மிகவும் புகழ்பெற்ற ஹேட்ச்பேக் மற்றும் பட்ஜெட் கார் இந்த i10. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் இந்த கார்களுக்கு தனி வரவேற்பு உள்ளது. இந்த காரின் அடுத்த தலைமுறை படைப்பாக விரைவில் அறிமுகமாக உள்ள கார் இந்த Fourth-gen i10. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்டில் இந்த கார் அறிமுகமாக உள்ளது.

இந்திய சந்தையில் மேலே கூறிய 4 கார்கள் அறிமுகமானாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய், தனது வாகனங்களுக்கான பெரும் வரவேற்பை தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய சந்தையில் புதிய கார்களை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த வரிசையில், ஹுண்டாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய 'காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி' (Compact Electric SUV) ரக காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய மாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.