PulseNews
தொழில்நுட்பம்

ரூ.10,000 கேஷ்பேக் ஆஃபர்: இந்தியாவில் களமிறங்கிய அல்ட்ரா பிரீமியம் ஹைசென்ஸ் மினி எல்.இ.டி டிவி!

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே மற்றும் ஆடியோ அம்சங்களுடன் கூடிய ‘ஹைசென்ஸ் யூஆர்8எஸ் ஆர்ஜிபி மினி எல்இடி டிவி’ (Hisense UR8S RGB MiniLED TV) புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு, பில்ட்-இன் சப்வூப்பர், வைடா டிவி ஓஎஸ் போன்ற பல்வேறு பிரீமியம் வசதிகளை இந்த டிவி கொண்டுள்ளது. 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் என 3 மாடல்களில் கிடைக்கிறது. இதில் 4K Ultra HD ரெசொலூஷன் கொண்ட ஆர்ஜிபி மினி எல்இடி (RGB MiniLED) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஹை-வியூ ஏஐ என்ஜின் ஆர்ஜிபி (Hi-View AI Engine RGB), 180Hz நேட்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவு கொண்டது. மேலும், ஆன்டி-ரெஃப்ளெக்சன் (Anti-Reflection) மற்றும் கிளார் ஃப்ரீ (Glare-Free) தொழில்நுட்பங்களும் இதில் உள்ளன. கேமிங் பிரியர்களுக்காக AMD FreeSync Premium Pro, VRR, ALLM, HDR 10+ Gaming, Dolby Vision Gaming மற்றும் Game Bar அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. டால்பி விஷன் IQ, HLG மற்றும் ஐமேக்ஸ் Enhanced ஆதரவுகள் உள்ளன. ஆடியோவைப் பொறுத்தவரை, 2.1.2 சேனல் சப்போர்ட் கொண்ட 89W ஸ்பீக்கர்கள், மல்டி-சேனல் சரவுண்ட் சவுண்ட், Dolby Atmos மற்றும் பில்ட்-இன் சப்வூப்பர் (Built-in Subwoofer) ஆகியவை இணைந்து சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. வைடா டிவி ஓஎஸ் (VIDAA TV OS) மூலம் இயங்குகிறது. வைடா வாய்ஸ் (VIDAA Voice) மற்றும் பில்ட்-இன் அலெக்சா (Built-in Alexa) வசதிகள் உள்ளன. மேலும் AI Picture, AI Sports Mode, AI RGB Light Sensor போன்ற தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன. Wi-Fi 6E, Bluetooth 5.4, Ethernet, Optical Audio போர்ட்டுகள் உள்ளன. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி செயலிகள் இதில் கிடைக்கின்றன. ஆரம்ப விலை ரூ.1,19,990-க்கு கிடைக்கிறது. அறிமுகச் சலுகையாக ரூ.10,000 கேஷ்பேக் மற்றும் ஜீரோ டவுன் பேமெண்ட் (Zero Down Payment) வசதி வழங்கப்படுகிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் ஆர்டர் செய்யலாம். 2 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரூ.10,000 கேஷ்பேக் ஆஃபர்: இந்தியாவில் களமிறங்கிய அல்ட்ரா பிரீமியம் ஹைசென்ஸ் மினி எல்.இ.டி டிவி!
PulseNews சுருக்கம்

இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் அதிநவீன அம்சங்களுடன் ‘ஹைசென்ஸ் யூஆர்8எஸ் ஆர்ஜிபி மினி எல்இடி’ (Hisense UR8S RGB MiniLED) டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 55, 65 மற்றும் 75 இன்ச் அளவுகளில் வெளிவந்துள்ள இந்த டிவி, 4K அல்ட்ரா ஹெச்டி ரெசல்யூஷன் கொண்ட ஆர்ஜிபி மினி எல்இடி டிஸ்ப்ளே மற்றும் ஹை-வியூ ஏஐ என்ஜின் வசதிகளைக் கொண்டுள்ளது.

ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு, பில்ட்-இன் சப்வூப்பர் மற்றும் வைடா டிவி ஓஎஸ் போன்ற பிரீமியம் வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய டிவி அறிமுகத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபாய் வரையிலான கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology