இந்தியாவின் முதல் ஏ.ஐ இயர்பட்ஸ்: 78 மொழிகளில் மொழிபெயர்க்கும் 'போவா ஏ.ஐ பட்ஸ் ப்ரோ'!
போவா (Pova) நிறுவனம் தனது புதிய 'Pova AI Buds Pro' ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களை இந்தியாவில் ஆக.14 அன்று நடைபெறவுள்ள அறிமுகத்திற்கு முன்னதாகவே அமேசான் (Amazon) மைக்ரோசைட் தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் போவா நிறுவனத்தின் முதல் ஆடியோ தயாரிப்பான இது இந்தியாவின் முதல் ஏ.ஐ இயர்பட்ஸ் (India's first AIearbuds) என்ற பெருமை உடன் களமிறங்குகிறது. வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நண்பகல் 12:00 மணி அளவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இது 'Amazon Specials' தயாரிப்பாக அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரவுள்ளது. போவா ஸ்மார்ட்போன்களின் பாணியிலேயே இதன் கேஸிங் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸின் உட்பகுதி பளபளப்பான அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், 'Quick Note' பதிவு அம்சத்தை உடனடியாகச் செயல்படுத்துவதற்காகச் சிவப்பு நிறப் பொத்தான் (Red Button) ஒன்று இதில் வழங்கப்பட்டுள்ளது. கூட்டங்களில் பேசப்படும் தகவல்களைத் தானாகவே சுருக்கமாகக் குறிப்பெடுத்துத் தரும் (Meeting Summaries) வசதி இதில் உள்ளது. சுமார் 78 மொழிகள் வரை நேரடியாக மொழிபெயர்க்கும் திறன் கொண்டுள்ளது. ஒரு மொழியில் பேசப்படும் குறிப்புகளை மற்றொரு மொழியில் கூட்டத்தின் குறிப்புகளாக (Meeting Minutes) மாற்றும் வசதியும் உள்ளது. Quick Notes & ஆடியோ ரெக்கார்டிங், இதில் உள்ள உள்ளமைக்கப்பட்ட நினைவகம் (Built-in Storage) மூலம், ஸ்மார்ட்போன் இல்லாமலேயே நேரடியாக இயர்பட்ஸ் வழியே 4 மணி நேரம் வரை ஆடியோவை பதிவு செய்ய முடியும். தெளிவான வாய்ஸ் கால்கள் மற்றும் பதிவுகளுக்காக 'Feedforward', 'In-call' மைக்ரோஃபோன்கள் மற்றும் 'Voice Pickup Unit' உள்ளடக்கிய 8 மைக்ரோஃபோன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வெளிப்புறச் சத்தத்தைத் தவிர்க்கும் வகையில் 48dB வரை செயல்படும் 'Hybrid Active Noise Cancellation' (ANC) அம்சம் உள்ளது. கணினி மற்றும் ஸ்மார்ட்போன் ஆகிய இரு சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து, மீண்டும் ரீ-கனெக்ட் செய்யத் தேவையில்லாமல் எளிதாக மாற்றிக்கொள்ளும் (Switch) வசதி உண்டு. ஒட்டுமொத்தமாக 40 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பயன்படுத்தக்கூடிய பேட்டரி லைஃப் வழங்குகிறது. இது USB Type-C வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) இரண்டையும் ஆதரிக்கும். தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாப்பு பெற இயர்பட்ஸ் மற்றும் கேஸ் ஆகிய இரண்டும் IP55 ரேட்டிங் பெற்றுள்ளன. இக்கருவியின் முழுமையான விலை விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் ஆகஸ்ட் 14 அன்று நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது அறிவிக்கப்படும்.

போவா நிறுவனம் தனது புதிய 'Pova AI Buds Pro' இயர்பட்ஸ்களை ஆகஸ்ட் 14-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அமேசான் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ள இந்த தயாரிப்பு, இந்தியாவின் முதல் ஏ.ஐ இயர்பட்ஸ் என்ற சிறப்பம்சத்துடன் சந்தைக்கு வருகிறது. 78 மொழிகளில் மொழிபெயர்க்கும் வசதி, கூட்டங்களின் உரையாடல்களைக் குறிப்பெடுக்கும் திறன் மற்றும் ஸ்மார்ட்போன் உதவியின்றி 4 மணிநேரம் ஆடியோவைச் சேமிக்கும் வசதி ஆகியவை இதில் உள்ளன.
இந்த இயர்பட்ஸில் 48dB வரை சத்தத்தைக் குறைக்கும் ஹைபிரிட் ஏ.என்.சி தொழில்நுட்பம், 8 மைக்ரோஃபோன்கள் மற்றும் 40 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.55 தரச்சான்றிதழ் பெற்ற இந்த சாதனம் வயர்லெஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் வசதிகளை ஆதரிக்கிறது. இரண்டு சாதனங்களில் ஒரே நேரத்தில் இணைக்கக்கூடிய இந்த இயர்பட்ஸின் விலை மற்றும் கூடுதல் விவரங்கள் அறிமுக நாளன்று தெரியவரும்.