PulseNews
தொழில்நுட்பம்

ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் 1,010 அப்ரண்டீஸ் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10, 12ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் செப்.7, 2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF), இந்திய ரயில்வேயின் முக்கிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். 1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இங்கு வந்தே பாரத், எல்.எச்.பி. உள்ளிட்ட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், தொழில்பழகுநர் சட்டம் 1961-ன் கீழ் 1,010 பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களில் கார்பெண்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் ஃபிரெஷர்ஸ் மற்றும் எக்ஸ்-ஐடிஐ பிரிவுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஃபிரெஷர்ஸ் பிரிவில் கார்பெண்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் உள்ளிட்ட பணிகளும், எம்.எல்.டி. ரேடியோலாஜி பிரிவிலும் காலியிடங்கள் உள்ளன. எக்ஸ்-ஐடிஐ பிரிவில் எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர் உள்ளிட்ட பணிகளுக்கு இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எம்.எல்.டி. ரேடியோலாஜி பணிக்கு 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஃபிரெஷர்ஸ் பயிற்சிக்காலம் 2 ஆண்டுகளாகவும், எக்ஸ்-ஐடிஐ பிரிவினருக்கு 1 ஆண்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 07.09.2026 அன்று 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ மதிப்பெண்களின் அடிப்படையிலான மெரிட் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

10-ஆம் வகுப்பு தகுதியுடையவர்களுக்கு மாதம் ரூ.8,200-ம், 12-ஆம் வகுப்பு மற்றும் எக்ஸ்-ஐடிஐ பிரிவினருக்கு ரூ.9,600-ம் பயிற்சி உதவித்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://pb.icf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் 07.09.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
PulseNews சுருக்கம்

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF), 1,010 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10, 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதி மற்றும் ஐடிஐ முடித்த விண்ணப்பதாரர்கள், இப்பணிகளுக்கு செப்டம்பர் 7, 2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

1955-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன் கீழ், வந்தே பாரத் மற்றும் எல்.எச்.பி உள்ளிட்ட பல்வேறு நவீன ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology