PulseNews
தொழில்நுட்பம்

தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தொழில்நுட்பக் கலாச்சார விழா!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில், மாபெரும் தொழில்நுட்ப - கலாச்சார விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ப்ராஜெக்ட் எக்ஸ்போ ,பாடல் மற்றும் நடன போட்டிகள், கட்டுரை மற்றும் கவிதை எழுதும் போட்டிகள், சுடோகு சவால்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ப்ராஜெக்ட் எக்ஸ்போவில் கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள்,6 தனித்துவமான பிரிவுகளின் கீழ் 733 புதுமையான திட்டங்களைக்காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 90 பள்ளிகளைச் சேர்ந்த 318 செயல்திட்டங்கள், இளைய மாணவர்களின் ஆக்கப்பூர்வமான திறமையை வெளிப்படுத்தும் வகையில். 3,800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலாச்சார நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்களான, ஈரோடு மாவட்ட தலைமைக்கல்வி அலுவலர் இ. மான்விழி, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர், கே.தெய்வானை, கோயம்புத்தூரில் உள்ள ஜட் எப் விண்ட்பவர் கோயம்புத்தூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர், ஆர்.செந்தில்குமார், கோயம்புத்தூர் பிரெசிடியோ நிறுவனத்தின் மூத்த பொறியியல் மேலாளர், கே.ஆர். குமரேஷ், சென்னை மைக்ரோசிப் டெக்னாலஜி நிறுவனத்தின் கார்ப்பரேட் அப்ளிகேஷன் இன்ஜினியர், சந்தோஷ் ஈஸ்வரமூர்த்தி, மற்றும் பெங்களூரு காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்சின் மூத்த இயக்குனர், வினோத் பரமேஸ்வரன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த மதிப்பிற்குரிய பிரமுகர்கள் திட்டங்கள் மற்றும் போட்டிகளை மதிப்பிடுவதற்கு நடுவர்களாகவும் பணியாற்றினார்கள். தொழில்நுட்ப மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அவர்களின் சிறப்பான திறமை மற்றும் முயற்சியைப் பாராட்டி மொத்தம் ₹2,50,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. கல்லூரியின் தாளாளர் ஈ.ஆர்.கே. கிருஷ்ணன், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள் மற்றும் முதல்வர் ர.பரமேஸ்வரன் ஆகியோர் இவ்விழாவின் வெற்றிக்காகப் பாடுபட்ட அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் இந்த மாபெரும் நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாணவர் விவகாரங்களின் முதன்மையர் கே. கண்ணன் மற்றும் அனைத்து நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளர்களையும் பாராட்டினர்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தொழில்நுட்பக் கலாச்சார விழா!
PulseNews சுருக்கம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் பிரம்மாண்டமான தொழில்நுட்ப மற்றும் கலாச்சார விழா நடைபெற்று வருகிறது. இதில் தொழில்நுட்பக் கண்காட்சி, பாடல், நடனம், கட்டுரை, கவிதை மற்றும் சுடோகு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்தக் கண்காட்சியில் கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 6 பிரிவுகளின் கீழ் 733 புதுமையான திட்டங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 90 பள்ளிகளிலிருந்து 318 செயல்திட்டங்கள் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளன.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology