PulseNews
தொழில்நுட்பம்

மின் கணக்கீடு தாமதமானால் 4 மடங்கு கட்டணமா? தஞ்சையில் பொதுமக்கள் அதிர்ச்சி புகார்

தஞ்சாவூர்: வீடுகளில் மின் கணக்கீடு செய்யும் பணியில் ஏற்படும் தாமதம் மற்றும் கணக்கீட்டு குளறுபடிகளால், வழக்கத்தைவிட பல மடங்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக சில வீடுகளில் நடப்பு மாத மின் கட்டணம் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மின் கணக்கீடு செய்ய வரும் பணியாளர்கள் டிஜிட்டல் மீட்டரில் உள்ள அளவை மின் அட்டையில் பதிவு செய்து கொடுக்க மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு

தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மின் நுகர்வோர் இணைப்புகளுக்கு பொதுவாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் மீட்டரில் பதிவாகியுள்ள முந்தைய மற்றும் தற்போதைய அளவுகளின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட மின்சார அலகுகள் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின் கணக்கீட்டில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, வழக்கமாக மாதத்தின் முதல் வாரத்தில் மின் கணக்கீடு செய்யப்படும் பகுதிகளில், கடந்த இரண்டு கணக்கீட்டு சுழற்சிகளாக மாதத்தின் கடைசி வாரத்தில் கணக்கீடு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நான்கு மடங்கு வரை உயர்ந்த கட்டணம்?

கணக்கீடு தாமதமாக மேற்கொள்ளப்படுவதால், இரண்டு மாத காலத்துக்குள் அதிக அலகுகள் பயன்படுத்தப்பட்டதாக கணக்கில் பதிவாகிறது. இதன் காரணமாக மின்சார கட்டணத்தின் படிநிலை மாறி, ஒரு யூனிட்டுக்கான கட்டண விகிதமும் அதிகரிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வழக்கமாக குறைந்த அளவில் மின் கட்டணம் செலுத்தி வந்த பல குடும்பங்களுக்கு தற்போது எதிர்பாராத வகையில் பல மடங்கு கட்டணம் வந்துள்ளதாகவும், சில வீடுகளில் நான்கு மடங்கு வரை கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், பழுதடைந்த மின் மீட்டர்கள் குறித்து ஏற்கனவே புகார் அளித்திருந்தும், அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்காததும் பிரச்சினைக்கு காரணமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இலவச மின்சாரத்துக்கு பாதிப்பா?

தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இலவச மின்சார திட்டத்தின் பயன் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் சில நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். மின் பயன்பாடு குறிப்பிட்ட அளவை கடக்கும்போது, அதிக கட்டண படிநிலைக்குள் செல்வதால் இலவச அலகுகளின் பயனும் குறைந்து, மொத்த கட்டணம் எதிர்பார்த்ததைவிட அதிகரிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மின் கட்டண நிர்ணய முறையில் 0 முதல் 100 யூனிட் வரை இலவசம் உள்ளிட்ட பல்வேறு படிநிலைகள் உள்ள நிலையில், ஒவ்வொரு படிநிலையிலும் மாறுபட்ட கட்டண விகிதம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் நுகர்வோருக்கு எளிதாக புரியும் வகையில் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

“குறித்த தேதியில் கணக்கீடு செய்ய வேண்டும்”

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “தஞ்சையில் வழக்கமாக மாதத்தின் முதல் வாரத்தில் மின் கணக்கீடு செய்யப்படும். ஆனால் கடந்த இரண்டு முறை கணக்கீடு செய்யும் பணி மாதத்தின் கடைசி வாரத்திற்கு தள்ளிப்போயுள்ளது. இதனால் மின் பயன்பாட்டு அலகுகள் அதிகரித்து, கட்டணமும் உயர்ந்துள்ளது.

கணக்கீடு தாமதமாகும்போது அதிக அலகுகள் ஒரே கணக்கீட்டில் சேர்கின்றன. இதனால் அதிக கட்டண படிநிலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், இலவச மின்சாரத்தின் பயனும் பாதிக்கப்படுகிறது.

எனவே மின் கணக்கீட்டை உரிய கால இடைவெளியில், நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மேற்கொள்ள வேண்டும். கணக்கீடு தாமதமாகி அதிக கட்டணம் விதிக்கப்பட்டதாக கருதப்படும் நுகர்வோரின் புகார்களை மின்வாரியம் உரிய முறையில் விசாரித்து தீர்வு காண வேண்டும்” என்றனர்.

மாதம் ஒருமுறை கணக்கீடு கோரிக்கை

மின் கணக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகளை நிரந்தரமாக தவிர்க்க, மாதம் ஒருமுறை மின் பயன்பாட்டை கணக்கிடும் முறையை கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மின்னிலக்க மின் அளவீட்டு கருவிகளை விரைந்து பொருத்துவதன் மூலம் நேரடியாகவும் துல்லியமாகவும் மின் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். தற்போது அதிகரித்துள்ள மின் கட்டணத்தால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக கூடுதல் கட்டணம் வந்துள்ள நுகர்வோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“மின் அட்டையில் ஏன் எழுதுவதில்லை?”

இதனிடையே, மின் கணக்கீட்டுக்கு வரும் பணியாளர்கள் டிஜிட்டல் மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு அளவை மின் அட்டையில் எழுதிக் கொடுப்பதில்லை என்ற மற்றொரு புகாரும் எழுந்துள்ளது. மின் கணக்கீடு எடுக்க வரும் பணியாளர்களிடம், மீட்டரில் பதிவாகியுள்ள தற்போதைய அளவை மின் அட்டையில் பதிவு செய்து தருமாறு பொதுமக்கள் கேட்பதாகவும், அதற்கு பணியாளர்கள் மறுப்பு தெரிவித்து, “உங்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும்” என கூறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு குறிப்பாக இந்த நடைமுறை சிக்கலை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. வீட்டின் உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி சென்றால், தாங்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கான கட்டணம் எவ்வளவு என்பது உடனடியாக தெரியாமல் போகிறது. இதனால் மின் பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மின் பயன்பாட்டு அளவு, முந்தைய அளவு, தற்போதைய அளவு மற்றும் செலுத்த வேண்டிய கட்டணம் உள்ளிட்ட விவரங்களை நுகர்வோர் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையான நடைமுறையை மின்வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மின் கணக்கீடு தாமதமானால் 4 மடங்கு கட்டணமா? தஞ்சையில் பொதுமக்கள் அதிர்ச்சி புகார்
PulseNews சுருக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் மின் கணக்கீடு செய்வதில் நிலவும் தாமதம் மற்றும் குளறுபடிகளால், மின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சில வீடுகளில் மின் கட்டணம் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மின் கணக்கீடு செய்ய வரும் பணியாளர்கள், டிஜிட்டல் மீட்டரில் உள்ள அளவுகளை மின் அட்டையில் பதிவு செய்து தர மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த முறையற்ற செயல்பாடுகளால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology