PulseNews
தொழில்நுட்பம்

உசேன் போல்ட்டை மிஞ்சிய ரோபோ; சீனாவின் அசத்தல் போட்டி

சீனாவின் தலைநகர் பீஜிங்கில், மனித வடிவ ரோபோக்களுக்கான 2 வது உலக விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. மனித ரோபோக்களின் ஒலிம்பிக் போட்டியாகப் பார்க்கப்படும் இதில், 51 வகையான விளையாட்டு பிரிவுகளில் 1000 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன. கால் பந்து, தடகளம், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல வகையான போட்டிகள் இதில் இடம் பெற்றன. இந்த போட்டிகளில்16 நாடுகளைச் சேர்ந்த 2056 மனித உருவிலான ரோபோக்கள் பங்கேற்றன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று தடகள போட்டி நடைபெற்றது. இதில், 100 மீட்டர் தடகள போட்டியில் சீனாவைச் சேர்ந்த ரோபோ சாதனை படைத்தது. மனிதர்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட்டின் உலக சாதனையை, இந்த சீன ரோபோ 9.39 வினாடிகளில் கடந்து, அந்த சாதனையை முறியடித்துள்ளது. உசேன் போல்ட் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தடகள சாம்பியன் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.58 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார். இன்று வரை 100 மீட்டர் பந்தயத்தில் இது உலக சாதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த மனித உருவிலான ரோபோ அந்த சாதனையை முறியடித்துள்ளது. இது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதிகப்படியான மனித உருவிலான ரோபோக்கள் சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உசேன் போல்ட்டை மிஞ்சிய ரோபோ; சீனாவின் அசத்தல் போட்டி
PulseNews சுருக்கம்

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான இரண்டாவது உலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ரோபோக்களுக்கான ஒலிம்பிக் போலக் கருதப்படும் இந்த நிகழ்வில் கால்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் தடகளம் உள்ளிட்ட 51 வகையான விளையாட்டுப் பிரிவுகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தத் தொடரில் 16 நாடுகளைச் சேர்ந்த 2056 ரோபோக்கள் பங்கேற்றன. இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 100 மீட்டர் தடகளப் போட்டியில் பங்கேற்ற ரோபோ ஒன்று, தடகள ஜாம்பவான் உசேன் போல்ட்டின் வேகத்தை மிஞ்சும் வகையில் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology