PulseNews
தொழில்நுட்பம்

பட்ஜெட்ல 5ஜி போன் வாங்கணுமா? ப்ளிப்கார்ட்டில் கலக்கலான இந்த ஆஃபர் மிஸ் பண்ணாதீங்க!

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy A06 5G ஸ்மார்ட்போன் தற்போது சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கவர்ச்சிகரமான வடிவமைப்பு, 5G இணைப்பு, பல்வேறு நவீன அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், தற்போது தள்ளுபடி விலையில் கிடைப்பதால் வாங்க விரும்புபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது பிளிப்கார்ட்டில் 4GB ரேம் + 64GB சேமிப்பு கொண்ட Samsung Galaxy A06 5G மாடலுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைக்கிறது. Samsung Galaxy A06 5G ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இது 720 × 1600 பிக்சல்கள் தீர்மானம், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த காட்சி தரத்தை வழங்கும் வசதிகளுடன் வருகிறது. இந்த போனில் MediaTek Dimensity 6300 SoC சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், One UI 7 அடிப்படையிலான Android 15 இயங்குதளத்தில் இயங்குகிறது. எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் இந்த சாதனத்திற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ06 5G-யில் 50MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 8MP முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. இதனுடன் LED Flash உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த போன் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. கூடுதலாக, microSD கார்டு மூலம் சேமிப்பு திறனை விரிவுபடுத்தும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5G, Wi-Fi, GPS, யு.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட இணைப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. கருப்பு, கிரே, பச்சை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. அதேபோல் IP54 தரச்சான்றுடன் தூசி மற்றும் நீர் தெறிப்பிலிருந்து பாதுகாப்பையும் வழங்குகிறது. பட்ஜெட் விலையில் 5G, பெரிய ஸ்கிரீன், சக்திவாய்ந்த சிப்செட், 50MP கேமரா மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்ட அம்சங்களுடன் கேலக்ஸி ஏ06 5G போன் தற்போது வாங்குவதற்கு ஏற்ற தேர்வாக இருக்கலாம்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology