PulseNews
தொழில்நுட்பம்

தியேட்டராக மாறும் வீடு: 120 இன்ச் ஸ்கிரீன், டால்பி ஆடியோவுடன் போட் சினிஹெட் புரொஜெக்டர்; விலை, சிறப்பம்சங்கள் என்ன?

போட் நிறுவனம் தனது சினிஹெட் எஃப்1 சீரிஸின் முதல் மாடலான CineHead F1 Pro ப்ரொஜெக்டரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படை மாடலான CineHead F1 இந்த மாத இறுதியில் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட் நிறுவனத்தில் கூகுள் டிவி (Google TV) வசதியுடன் வெளிவரும் முதல் பிரொஜெக்டர் சீரிஸ் இதுவாகும். இந்தியாவில் போட் சினிஹெட் F1 ப்ரோ ப்ரொஜெக்டரின் ஆரம்ப சலுகை விலை (Introductory price) ரூ. 32,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் தற்போது போட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலின் விலை விவரங்கள் அதன் அறிமுகத்தின்போது அறிவிக்கப்படும். இது 1080p நேட்டிவ் தரத்துடன் 4K வீடியோ ஆதரவைக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 120 இன்ச் திரை அளவை வழங்கும் இச்சாதனம் டால்பி ஆடியோ (Dolby Audio) தொழில் நுட்பத்துடன் வெளிவருகிறது. கூகுள் பிளே ஸ்டோர் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட செயலிகள், பிரத்யேக கிட்ஸ் மோட் (Kids mode), கூகுள் அசிஸ்டன்ட் குரல் கட்டுப்பாடு மற்றும் நெட்ஃபிக்ஸ், யூடியூப் செயலிகளுக்கான பிரத்யேக பட்டன்களைக் கொண்ட ரிமோட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 'ஆட்டோஃபோகஸ்' (Autofocus), 'ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன்' (Auto keystone correction) மற்றும் 'ஆப்ஸ்டக்கிள் அவாய்டன்ஸ்' (Obstacle avoidance) போன்ற அம்சங்கள் உள்ளதால், திரையை கைமுறையாகச் சரிசெய்ய வேண்டிய அவசியம் இருக்காது. மீடியாட்க் (MediaTek) பிராசஸர், 2GB ரேம் மற்றும் 32GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. Dual-band Wi-Fi, ப்ளூடூத் 5.1, HDMI, USB, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் HDMI ARC/eARC வசதிகளுடன், எளிதான வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Screen mirroring) ஆதரவும் இதில் உள்ளது.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology