Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!

Chennai OMR, Radial Road integrated mobility: சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடங்களான ராஜீவ் காந்தி சாலை எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவற்றை உலகத்தரத்திலான மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக (Model Urban Mobility Corridors) மாற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA - கும்டா) பிரம்மாண்ட திட்டத்தை வடிவமைத்து வருகிறது. சாலைப் போக்குவரத்து, அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, தடையற்ற பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

32.4 கி.மீ நீள சாலைகளில் விரிவான மேம்பாட்டு திட்டம்

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 32.4 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப் பகுதிகள் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன. இதில் மத்திய கைலாஷ் முதல் கேளம்பாக்கம் வரையிலான 25 கிலோமீட்டர் நீள OMR சாலையும், பல்லாவரம் மேம்பாலம் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரையிலான 7.4 கிலோமீட்டர் நீள ரேடியல் சாலையும் அடங்கும். இந்த பிரம்மாண்ட மாற்றத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிப்பதற்கு 'கும்டா' அமைப்பு தற்போது டெண்டர் கோரியுள்ளது. இந்த அறிக்கை தயாரானதும், மாநில நெடுஞ்சாலைத் துறை மூலமாக மேம்பாட்டுப் பணிகள் நேரடியாகச் செயல்படுத்தப்படும்.

மெட்ரோ ரயிலுடன் தடையற்ற இணைப்பு வசதிகள்

OMR பாதையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளுடன் இந்த சாலை மேம்பாட்டு திட்டத்தையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றி பொதுமக்கள் சிரமமின்றி நடந்து செல்லவும், பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் சைக்கிள் போன்ற பிற போக்குவரத்து முறைகளுக்கு எளிதாக மாறவும் ஏதுவாக ‘மல்டிமாடல் மையங்கள்’ (Multimodal Hubs) அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் அதே காலகட்டத்திற்குள் இந்த சாலைச் சீரமைப்புப் பணிகளையும் முடித்து, இரண்டையும் ஒரே நேரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நகர்ந்தால், வரும் ஜனவரி மாதத்திற்குள் விரிவான திட்ட அறிக்கை தயாராகி, ஜூன் மாதத்திற்குள் பணிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டுமானங்கள் வேகமெடுக்கும்.

தனிப் பேருந்து வழித்தடங்கள் மற்றும் BRTS திட்டம்

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் நேரத்தைக் குறைக்கும் வகையில், OMR மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலைகளில் பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தனி வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளன. குறிப்பாக, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை போதிய அகலத்தைக் கொண்டிருப்பதால், அங்கு அதிவிரைவு பேருந்து சேவை (BRTS - Bus Rapid Transit System) திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. நவீன டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் பிரத்யேக தடுப்புகள் மூலம் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் வகையிலான திட்டங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து கும்டா வடிவமைத்து வருகிறது.

பாதுகாப்பான உள்கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகள்

இந்த திட்டம் வெறும் சாலை விரிவாக்கத்தோடு நின்றுவிடாமல், ஒட்டுமொத்த நகர்ப்புற உள்கட்டமைப்பையும் நவீனமாக்குகிறது. சீரான சாலை அகலம், பசுமையான மையத்தடுப்புகள் (Green Medians), தனியான சேவைச் சாலைகள், பாதசாரிகளுக்கான நவீன நடைபாதைகள், பிரத்யேக சைக்கிள் பாதைகள் மற்றும் நடைமேம்பாலங்கள் (Foot Over Bridges) போன்றவை அமைக்கப்படவுள்ளன. மேலும் மின்சாரம், தொலைத்தொடர்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய உள்கட்டமைப்புகளும் பூமிக்கடியில் கொண்டு செல்லப்பட்டு முறைப்படுத்தப்படும். மழைநீர் வடிகால் வசதிகள், நிழல் தரும் மரக்கூட்டங்கள், பூங்காக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளும் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடப்பட்டுள்ளன.
Source: Read Full Article

சென்னையின் முக்கிய போக்குவரத்து சாலைகளான ஓஎம்ஆர் (ராஜீவ் காந்தி சாலை) மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஆகியவற்றை உலகத்தரம் வாய்ந்த மாதிரி நகர்ப்புற போக்குவரத்து வழித்தடங்களாக மாற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் (CUMTA) திட்டமிட்டுள்ளது. லண்டன் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு இணையாக இந்தச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், மெட்ரோ ரயில் சேவை, பேருந்து போக்குவரத்து மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான பிரத்யேக பாதைகள் என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், போக்குவரத்தை சீரமைக்கவும் கும்டா அமைப்பு முனைப்பு காட்டி வருகிறது.