செவ்வாய் கிரகம் மட்டும் இல்லையென்றால் பூமியின் கதி என்ன? விண்வெளி ஆய்வில் வெளியான ஆச்சரிய உண்மை!
சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் 'சிவப்பு கிரகம்' என்று அழைக்கப்படும் செவ்வாய், வெறும் தரிசு நிலம் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதுதான் பூமியின் காலநிலையைத் திரைமறைவில் இருந்து இயக்கும் 'மாஸ்டர்' என்ற அதிரடி தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், செவ்வாய் கிரகம் பூமியின் மீது செலுத்தும் ஈர்ப்பு விசை மிக வலிமையானது. சமீபத்திய ஆய்வின்படி, செவ்வாய் கிரகம் மட்டும் சூரிய குடும்பத்தில் இல்லையென்றால், பூமியின் மிக முக்கியமான 2 காலநிலைச் சுழற்சிகள் (Climate Cycles) காணாமல் போயிருக்கும். விஞ்ஞானிகள் சோதனையில் செவ்வாய் கிரகத்தை மட்டும் சூரிய குடும்பத்தில் இருந்து நீக்கிப் பார்த்தனர். அப்போது 1 லட்சம் மற்றும் 24 லட்சம் ஆண்டுகள் நீடிக்க வேண்டிய பூமியின் காலநிலை மாற்றங்கள் அப்படியே நின்றுவிட்டன. அதாவது, பூமியின் நீண்டகால காலநிலையைச் செதுக்குவதில் செவ்வாய்க்குப் பெரும் பங்கு உண்டு. இதுவரை பூமியின் அச்சு (Axis) சாய்ந்துவிடாமல் இருக்க 'நிலவு' மட்டுமே உதவுகிறது என்று நாம் படித்து வந்தோம். ஆனால் உண்மை அதுவல்ல. செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைதான் பூமியின் சாய்வை (21.5 முதல் 24.5 டிகிரிக்குள்) கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. செவ்வாயின் இந்த 'சப்போர்ட்' இல்லையென்றால், பூமியின் சுழற்சி சீராக இருக்காது. செவ்வாய் கிரகம் சூரிய குடும்பத்தில் இருக்கும் இடம்தான் அதன் வெற்றிக்கு காரணம். சூரியனுக்கு ரொம்ப அருகிலும் இல்லாமல், பூமியின் சுற்றுப்பாதையைத் தொடக்கூடிய சரியான தூரத்தில் இருப்பதால், தனது ஈர்ப்பு விசையால் பூமியின் காலநிலையை மில்லியன் கணக்கான ஆண்டுகளாகச் சீரமைத்து வருகிறது. இப்போது பூமி வெப்பமடைவதற்கு செவ்வாய் காரணமா? நிச்சயமாக இல்லை. இந்த கிரக மாற்றங்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் மெதுவாக நடப்பவை. பனி யுகங்கள் எப்போது வர வேண்டும், எப்போது முடிய வேண்டும் என்பதை மட்டுமே இவை தீர்மானிக்கின்றன. தற்போது நாம் சந்திக்கும் புவி வெப்பமடைதலுக்கு மனிதர்களின் செயல்பாடுகளே காரணம். பூமி என்ற அழகான கோள் உயிர் வாழ்வதற்குத் தகுதியாக இருப்பதற்கு, அருகில் இருக்கும் செவ்வாய் கிரகமும் முக்கியக் காரணம் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. பிரபஞ்சத்தில் எதுவும் சும்மா இல்லை; ஒவ்வொரு கிரகமும் மற்றொன்றோடு பிணைக்கப்பட்டுத் தான் இருக்கிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகம் வெறும் தரிசு நிலமாக மட்டும் கருதப்பட்ட நிலையில், அது பூமியின் காலநிலையை மறைமுகமாக கட்டுப்படுத்தும் முக்கிய சக்தியாகச் செயல்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், செவ்வாய் கிரகம் பூமியின் மீது மிக வலிமையான ஈர்ப்பு விசையைச் செலுத்தி வருகிறது.
சமீபத்திய ஆய்வுகளின்படி, சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகம் இல்லையென்றால், பூமியின் மிக முக்கியமான இரண்டு காலநிலை சுழற்சிகள் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமிக்கு அருகில் இருக்கும் செவ்வாய், நமது கிரகத்தின் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.