PulseNews
தொழில்நுட்பம்

ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏசி/ டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களின் உற்பத்தியை விரிவுபடுத்தவும், தனது ப்ரொப்ரைட்டரி சார்ஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தவும் கிளீன்-டெக் நிறுவனமான பிளக்ஸ்மார்ட் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈவி சார்ஜிங் தொழில்நுட்ப நிறுவனமும், ஐஐடி சென்னை ரிசர்ச் பார்க்-ல் இன்குபேட் செய்யப்பட்ட நிறுவனமுமான பிளக்ஸ்மார்ட், சென்னையில் இன்று (13 ஆகஸ்ட் 2026) நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு இன்வெஸ்ட்மென்ட் கான்க்ளேவ் 2026’ நிகழ்வில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிளக்ஸ்மார்ட் நிறுவனம் தனது மேனுஃபேக்சரிங் செயல்பாடுகள், ஆர் & டி திறன்கள் மற்றும் சார்ஜிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சூழலை விரிவுபடுத்துவதற்காக ₹100 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீட்டின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் ஹார்ட்வேர் இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ், எம்பெடெட் சாஃப்ட்வேர் மற்றும் அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங் ஆகிய துறைகளில் 500-க்கும் மேற்பட்ட நேரடி, உயர் திறன் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தின் அறிமுகம்

ஃபுல் ஸ்டாக் ஈவி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பில்டராக செயல்பட்டு வரும் பிளக்ஸ்மார்ட் நிறுவனம், 3.3 கிலோவாட் முதல் 360 கிலோவாட் வரை திறன் கொண்ட உள்நாட்டிலேயே இன்ஜினியரிங் செய்யப்பட்ட ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜர்கள், ஏஆர்ஏஐ தரநிலைகளுக்கு இணங்கும் சார்ஜர் கன்ட்ரோலர்கள், பவர் லைன் கம்யூனிகேஷன் (பிஎல்சி) மாட்யூல்கள் மற்றும் கிளவுட்-நேட்டிவ் சார்ஜர் மேனேஜ்மென்ட் சிஸ்டம்கள் (சிஎம்எஸ்) ஆகியவற்றை வடிவமைத்து உற்பத்தி செய்து வருகிறது.

புதிய முதலீட்டின் மூலம், வல்லம், ஓரகடம் தொழில்துறை மையத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் மேனுஃபேக்சரிங் ஆலையின் புரொடக்ஷன் கேபாசிட்டி கணிசமாக அதிகரிக்கப்படும்.

பிளக்ஸ்மார்ட் நிறுவனம் முன்னணி ஆட்டோமோட்டிவ் ஓஇஎம்கள், ஃப்ளீட் ஆபரேட்டர்கள், சிபிஓக்கள் மற்றும் பப்ளிக் செக்டர் ஆர்கனைசேஷன்கள் ஆகியவற்றுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறது. நம்பகமான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சார்ஜிங் டெக்னாலஜி மூலம் ஈவி பயன்பாட்டை வேகப்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.

இந்த முதலீடு, தமிழ்நாட்டை ஈவி மேனுஃபேக்சரிங் மற்றும் சார்ஜிங் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கான முக்கிய மையமாக மேலும் வலுப்படுத்தும் என்றும், இந்தியாவின் க்ளீன் மொபிலிட்டி இலக்குகளுக்கு ஆதரவளிக்கும் என்று பிளக்ஸ்மார்ட் தெரிவித்துள்ளது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
PulseNews சுருக்கம்

ஐஐடி சென்னையைச் சேர்ந்த பிளக்ஸ்மார்ட் நிறுவனம், உள்நாட்டிலேயே ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களைத் தயாரிக்கும் பணிகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்காகத் தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அந்நிறுவனம், 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இந்த முதலீட்டின் மூலம், தனது பிரத்யேக சார்ஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் பணியையும் பிளக்ஸ்மார்ட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இத்திட்டமானது உள்நாட்டு சார்ஜர் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமையும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology