PulseNews
தொழில்நுட்பம்

TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான ஐக்யூப் (iQube) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய சிறப்புப் பதிப்பான ஐக்யூப் மில்லியனர் (iQube MillionR) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐக்யூப் மாடல் 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்ற மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக இந்த ஸ்பெஷல் எடிஷன் வெளியாகியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 10 லட்சம் விற்பனையைத் தாண்டியபோதும் இதே மில்லியனர் என்ற பெயரில்தான் சிறப்புப் பதிப்பு வெளியானது.

தற்போது அதே சாதனையை ஐக்யூப் எட்டியுள்ளதன் மூலம், இந்த ஆண்டு இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனமாக இது மாறியுள்ளது. 3.5 kWh பேட்டரி வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்புப் பதிப்பின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,40,138 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மற்றும் புதிய அம்சங்கள்

இந்த மில்லியனர் எடிஷனில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதன் புதிய நிறம்தான். வட துருவத்தில் தோன்றும் நார்தர்ன் லைட்ஸ் (Northern Lights) ஒளியால் ஈர்க்கப்பட்டு, அரோரா க்ரீன் (Aurora Green) என்ற புதிய டியூயல் டோன் நிறத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ஐக்யூப் மாடல்களில் இருந்து இதனை தனித்துக் காட்ட, பிரத்யேகமான மில்லியனர் பேட்ச் மற்றும் பிரீமியம் சீட் கவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் தோற்றத்தில் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. எஞ்சின் மற்றும் பேட்டரியைப் பொறுத்தவரை வழக்கமான 3.5 kWh ஐக்யூப் மாடலையே இது ஒத்துள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 145 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும்.

இதன் ஸ்டோரேஜ் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் புதிய யுட்டிலிட்டி ஸ்டோரேஜ் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதால், மொத்த ஸ்டோரேஜ் அளவு 32 லிட்டரிலிருந்து 35.5 லிட்டராக அதிகரித்துள்ளது. இருக்கையின் கீழ் உள்ள யுஎஸ்பி போர்ட் மட்டுமின்றி, புதிதாக டைப்-சி சார்ஜிங் போர்ட்டும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, பல்வேறு ரைடு மோடுகள் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் உள்ளிட்ட 118-க்கும் மேற்பட்ட கனெக்டட் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

விலை எப்படி?

தற்போது டிவிஎஸ் ஐக்யூப் வரிசை ஸ்கூட்டர்களின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,11,310 ஆக உள்ளது. இதில் பல்வேறு பேட்டரி மற்றும் மோட்டார் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதன் டாப் எண்ட் ST வேரியண்டில் பெரிய 5.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது; இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 212 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் என்ற புதிய திட்டத்தையும் டிவிஎஸ் வழங்குகிறது. ₹59,999 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும் இத்திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் பேட்டரி பயன்பாட்டிற்கு ஏற்ப தனியாக கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தை வாங்குவதற்கான ஆரம்பக் கட்டணச் செலவு வாடிக்கையாளர்களுக்கு கணிசமாகக் குறையும்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TVS iQube MillionR எடிஷன் அறிமுகம்! 212 கி.மீ ரேஞ்ச், அதிக இடவசதி, ரூ.60 ஆயிரம் விலையில்- வேறென்ன ஸ்பெஷல்?
PulseNews சுருக்கம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய சிறப்புப் பதிப்பான 'ஐக்யூப் மில்லியனர்' (iQube MillionR) மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் 212 கி.மீ ரேஞ்ச் மற்றும் அதிக இடவசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐக்யூப் மாடல் 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்ற மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக இந்த ஸ்பெஷல் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 60 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology