ஒரே சார்ஜில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. Mahindra BE 07 வரப்போது மின்சார கார்! எப்போது?

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் மஹிந்திரா. இவர்களின் கார்களுக்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. மஹிந்திரா நிறுவனம் தற்போது மின்சார கார் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Mahindra BE 07 SUV:

இந்தியாவில் மின்சார கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மஹிந்திரா ஏராளமான மின்சார கார்களை தயாரித்து வருகிறது. மஹிந்திரா நிறுவனம் விரைவில் Mahindra BE 07 SUV காரை அறிமுகப்படுத்த உள்ளது.

Mahindra BE 06 காரின் அப்டேட் வெர்சனாக அடுத்தகட்ட படைப்பாக இந்த கார் உள்ளது. இந்த கார் 4 ஆயிரத்து 565 மி.மீட்ரட் நீளமும், 1900 மி.மீட்டர் அகலமும் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது. 1600 மி.மீட்டர் உயரத்துடன் தயாரிக்கப்படுகிறது. ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகளுடனும், வசீகர தோற்றத்துடனும் இந்த காரை தயாரிக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

சிறப்புகள்:

12.3 இன்ச் டிஸ்ப்ளே இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் கேபினின் 3 டிஸ்ப்ளே பொருத்தப்பட உள்ளது. இந்த 3 டிஸ்ப்ளேவும் தொடுதிரையாக வடிவமைக்கப்பட உள்ளது. முன் இருக்கைகள் காற்றோட்ட வசதியுடனும் வடிவமைக்கப்பட உள்ளது. மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதியுடன் இந்த கார் அறிமுகமாக உள்ளது. வயர்லஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி உள்ளது. மல்டிபிள் டைப் சி போர்ட் வசதி உள்ளது. ஹர்மன் கார்டன் ஆடியோ, டால்பி அட்மோஸ் வசதி கொண்டதாக இந்த கார் உள்ளது.

650 கி.மீட்டர் மைலேஜ்:

மின்சார காரான இந்த கார் 2 வேரியண்டில் அறிமுகமாக உள்ளது. ஒன்று 59 கிலோவாட் பேட்டரி கொண்டதாகவும், மற்றொன்று 79 கிலோவாட் பேட்டரி கொண்டதாகவும் வடிவமைக்கப்பட உள்ளது. 59 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் ஒரே சார்ஜில் 530 கிலோமீட்டர் வரை மைலேஜும், 79 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் ஒரே சார்ஜில் 650 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டதாக அறிமுகமாக உள்ளது.

சிறப்புகள்:

59 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் 228 எச்பி குதிரை ஆற்றலும், 79 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் 282 எச்பி குதிரை ஆற்றல் கொண்டதாகவும் அறிமுகமாக உள்ளது. எல்ஃஎப்பி பேட்டரி பொருத்தப்பட உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த காரில் ஏற்படுத்தப்பட உள்ளது. 80 சதவீத சார்ஜை 30 நிமிடங்களில் எட்டும் வசதியில் வடிவமைக்கப்படுகிறது. இந்த கார் அடுத்தாண்டு இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

டாடா ஹாரியர் இவி, வின்ஃபாஸ்ட் விஎஃப்7 ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் அறிமுகமாக உள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமானால் சொகுசு ரக மின்சார கார்களுக்கான சந்தையில் முக்கியமான இடத்தில் இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் மின்சார கார்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனமான மஹிந்திரா, புதிய மின்சார வாகன தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ஒரே சார்ஜில் 650 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரக்கூடிய 'மஹிந்திரா பிஇ 07' (Mahindra BE 07) எனும் மின்சார எஸ்யூவி காரை விரைவில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்திய வாகனச் சந்தையில் மஹிந்திரா கார்களுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு உள்ளது. தற்போதைய சூழலில் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை முன்னிட்டு, பல்வேறு புதிய மாடல்களை இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.