PulseNews
தொழில்நுட்பம்

Upcoming 7 Seater: ரூ.13 லட்சம் பட்ஜெட்டில் ஆல் நியூ ஃபாரின் 7 சீட்டர் - கொரியன் செட்டிற்கு மரன அடி? புதிய காரின் டிடெய்ல்ஸ்

Hyundais Upcoming 7 Seater: ஹுண்டாய் நிறுவனம் 13 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் புதிய 7 சீட்டர் கார் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

முற்றிலும் புதிய 7 சீட்டர்..

இந்தியாவில் ஏழு இருக்கைகளை கொண்ட வாகனப் பிரிவில் தற்போது வலுவான தேவை நிலவுகிறது. இதனை உணர்ந்த உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பல கார் தயாரிப்பாளர்கள் இந்தப் பிரிவில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இவற்றுடன், ஹுண்டாய் நிறுவனமும் இந்தியாவில் ஒரு புதிய 7 சீட்டர் எம்பிவி-யை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது கியா கேரன்ஸ் கிளாவிஸ் மாடலுக்கு ஒரு மாற்றாக அமையலாம். மலிவு விலை ஏழு இருக்கைகள் கொண்ட எம்பிவி பிரிவில் ஹுண்டாயின் திட்டம் என்னவாக இருக்கலாம் என தற்போதே எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கியுள்ளன.

மாருதியின் எர்டிகாவிற்கு போட்டியாக..!

கொரிய வாகன உற்பத்தியாளரான ஹுண்டாய், தற்போது மலிவு விலை MPV பிரிவில் நுழையத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பிரிவில் வழக்கமாக அதிகம் விற்பனையாகும் மாடலான எர்டிகாவிற்குப் போட்டியாக இது நிலைநிறுத்தப்பட உள்ளது. எர்டிகாவை விட ஒரு படி மேலே இருப்பதற்காக, உலகளவில் விற்பனையாகும் ஸ்டார்கேசர் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்கேஸர் 4.61 மீட்டர் நீளம் கொண்டது, இது எர்டிகாவை விட மிகவும் பெரியது. எனவே, பயணிகளுக்கு மிகவும் வசதியான இருக்கை வசதி, விசாலமான கேபின் கிடைக்கும். இந்தப் பிரிவில் முன்னணியில் உள்ள காரை வீழ்த்துவதற்கு, 'பெரிய இடவசதி' என்ற சந்தைப்படுத்தல் உத்தி மட்டும் பலனளிக்காது. வாடிக்கையாளர்களைக் கவர ஹுண்டாய் கூடுதல் அம்சங்களைச் சேர்க்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுண்டாய் எம்பிவியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

ஸ்டார்கேஸர் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் இருப்பதோடு தாராளமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்தப் பட்டியலில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்க்ரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஆட்டோமேட்டிக் ஏசி, பின் இருக்கை மேசை, ADAS, ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்ட்) மற்றும் பல அடங்கும். வெளிநாடுகளில், இந்த ஏழு இருக்கைகள் கொண்ட MPV-யில் பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்ட் முன் இருக்கைகள் வழங்கப்படவில்லை. ஆனால் இந்தியாவிற்கு, கியா கேரன்ஸ் கிளாவிஸுக்கு இணையாக ஹூண்டாய் இந்த அம்சங்களை கூடுதலாக சேர்க்கலாம்.

ஹுண்டாய் எம்பிவியின் இன்ஜின் விவரங்கள்

உலகளவில், ஸ்டார்கேஸர் 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் (113 bhp & 144 Nm) மூலம் இயக்கப்படுகிறது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் iVT ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஹூண்டாய் தனது Hy-CNG (டூயல்-டேங்க் CNG கிட்) தொழில்நுட்பத்தை இந்த MPV-யில் வழங்கக்கூடும். கூடுதலாக இந்த MPV-யில் க்ரேட்டா வாயிலாக அறிமுகமாக உள்ள புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் சேர்க்க திட்டமிடலாம்.

இதையும் படியுங்கள்: Safest SUV: டாடாவால் முடியாத பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்பான எஸ்யுவி - தென்கொரிய மாடலின் முழு விவரம்

ஹுண்டாய் எம்பிவி - வெளியீடு & விலை

புதிய 7 சீட்டர் எம்பிவிக்கான சரியான வெளியீட்டு கால அட்டவணையை ஹுண்டாய் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் 2027-ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2028-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியானதும், ஹுண்டாயின் புதிய 7 சீட்டரை கொண்ட கொண்ட கார், மாருதி சுசூகி எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலையைப் பொறுத்தவரை, ஹூண்டாயின் எம்பிவியானது அதன் கியா மாடலின் விலைக்கு இணையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எனவே, இதன் விலை ரூ. 13 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Upcoming 7 Seater: ரூ.13 லட்சம் பட்ஜெட்டில் ஆல் நியூ ஃபாரின் 7 சீட்டர் - கொரியன் செட்டிற்கு மரன அடி? புதிய காரின் டிடெய்ல்ஸ்
PulseNews சுருக்கம்

இந்தியாவில் ஏழு இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ஹுண்டாய் நிறுவனம் புதிய 7 சீட்டர் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கார் மாடல் சுமார் 13 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

இந்திய சந்தையில் ஏற்கனவே உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஹுண்டாயின் இந்த புதிய மாடல் களம் இறங்குகிறது. இந்த காரின் வருகை குறிப்பிட்ட வாகனப் பிரிவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology