PulseNews
தொழில்நுட்பம்

இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு தகவல்!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NCPI) வெளியிட்டுள்ள 2026 ஜூன் மாத நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த யுபிஐ சந்தையில் ஃபோன்பே (PhonePe) 46.2% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கூகுள் பே (Google Pay) 32.6% பங்கைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த இரு செயலிகள் மட்டுமே நாட்டின் 80% யுபிஐ சந்தையைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், Paytm 7.9%, Navi 3.7%, Super.money 1.9%, BHIM 1.0% மற்றும் FamApp by Trio 0.9% பங்கு வகிக்கின்றன.

பரிவர்த்தனை புள்ளிவிவரங்கள் மற்றும் சராசரி செலவு

ஒரு மாத கணக்கீட்டின்படி இந்தியாவில் மொத்தமாக 2,270 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 28.9 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிமாறப்பட்டுள்ளது. இதில் சராசரியாக ஒரு பரிவர்த்தனையின் மதிப்பு ரூ. 1,273 ஆகும். மக்கள் தினசரி பயன்படுத்தும் இடங்களில் சராசரி தொகையை நோக்கினால், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ரூ. 1,367, பெட்ரோல்/டீசலுக்கு ரூ. 658, மருந்தகங்களில் ரூ. 423, மளிகைப் பொருட்களுக்கு ரூ. 213, உணவகங்களில் ரூ. 173, பேக்கரயில் ரூ. 137, ஃபாஸ்ட் ஃபுட்டிற்கு ரூ. 120 மற்றும் டிஜிட்டல் தங்கத்திற்கு ரூ. 109 வரை செலவழிக்கப்படுகிறது.

அதிகம் பயன்படுத்தப்படும் இடங்கள்

இந்தியர்கள் யுபிஐ பணப்பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்தும் டாப் 10 இடங்களில் மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் 373.9 கோடி பரிவர்த்தனைகளுடன் முதலிடத்தில் உள்ளன. இதற்காக மட்டும் மக்கள் செலவழித்த தொகை ரூ. 79,705 கோடியாகும். இதனைத் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் மையங்களில் 144.9 கோடி பரிவர்த்தனைகளும், உணவகங்களில் 124.2 கோடி, தொலைத்தொடர்பு/ரீசார்ஜிற்கு 82.4 கோடி, பெட்ரோல் பங்குகளில் 71.6 கோடி, பெட்டிக்கடைகளில் 41.6 கோடி, பேக்கரிகளில் 39.6 கோடி, மருந்தகங்களில் 29.4 கோடி, பால் கடைகளில் 26.8 கோடி மற்றும் டிஜிட்டல் தங்கம் வாங்குவதில் 23.2 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றுள்ளன.

யுபிஐ பயன்பாட்டின் இரு வேறு முகங்கள்

யுபிஐ பரிவர்த்தனையின் எண்ணிக்கையில் 3-ல் 2 பங்கு (63.5%) கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கேச் செல்கிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையேயான பரிவர்த்தனை 36.5% ஆக உள்ளது. ஆனால், மொத்த பண மதிப்பில் 70% பரிமாற்றம் தனிநபர்களுக்கு இடையே தான் நடைபெறுகிறது. கடன் அடைப்பது, பங்குச் சந்தை பேமெண்ட், கரண்ட் & வாட்டர் பில், லோன் & EMI போன்ற பெரிய தொகைகளுக்கான பரிவர்த்தனைகள் குறைந்த எண்ணிக்கையிலும், மளிகைப் பொருட்கள், ஃபாஸ்ட் ஃபுட், போக்குவரத்து, காபி & ஸ்நாக்ஸ் போன்ற குறைந்த தொகைக்கான பரிவர்த்தனைகள் அதிக எண்ணிக்கையிலும் நடைபெறுகின்றன.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இனி ஸ்கேன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க: யுபிஐ பயன்பாட்டில் வெளியான பரபரப்பு தகவல்!
PulseNews சுருக்கம்

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், யுபிஐ சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் செயலிகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. 2026 ஜூன் மாத நிலவரப்படி, 46.2 சதவீத பங்களிப்புடன் ஃபோன்பே (PhonePe) முதலிடத்திலும், 32.6 சதவீத பங்களிப்புடன் கூகுள் பே (Google Pay) இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்த இரண்டு முன்னணி செயலிகள் மட்டுமே ஒட்டுமொத்த யுபிஐ சந்தையில் சுமார் 80 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மீதமுள்ள சந்தையில் பேடிஎம் (Paytm) 7.9 சதவீதமும், நேவி (Navi) 3.7 சதவீதமும், சூப்பர்.மணி (Super.money) உள்ளிட்ட பிற செயலிகளும் பங்கு வகிக்கின்றன.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology