PulseNews
தொழில்நுட்பம்

Tata 7 Seater: ஹிட்டடித்த எஸ்யுவியை 7 சீட்டராக அப்க்ரேட் செய்யும் டாடா..! விலை, அம்சங்கள், வசதிகள், ரேட்டிங்

Tata Sierra 7 Seater: டாடா சியாராவின் 7 சீட்டர் எடிஷன் அடுத்த ஆண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம்.

டாடா சியாரா 7 சீட்டர்..!

டாடா நிறுவனத்தின் லெஜண்டரி கார் மாடல்களில் ஒன்றான சியாரா, நவீன தொழில்நுட்பம் மற்றும் ரெட்ரோ தோற்றம் ஆகியவற்றின் கலவையாக அப்க்ரேட் செய்யப்பட்டு அண்மையில் ரீலாஞ்ச் செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் சியாரா அடிப்படையில் ஒரு 7 சீட்டரை உருவாக்க இந்த உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த கார் எப்படி இருக்கக் கூடும்? என்ன மாதிரியான அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

டாடா சியாரா 7 சீட்டர் - டிசைன் விவரங்கள்

டாடா சியாராவின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம், அதன் கம்பீரமான தோற்றம் மற்றும் உண்மையான எடிஷனிலிருந்து அப்படியே பின்பற்றப்பட்ட தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களாகும். ப்ராண்ட் ட்சார்பில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் உற்பத்தி செய்யப்படும் ஆர்கோஸ் ப்ளாட்ஃபார்மில் புதிய சியாரா எடிஷன் உருவாகலாம். அதன்படி, இதன் வழக்கமான எடிஷனை காட்டிலும் 7 சீட்டரானது பின்புறம் கூடுதல் நீளத்தை பெறும். செங்குத்தான ஹெட்லேம்ப்களுடன் எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளை இணைக்கும் தனித்துவமான வடிவமைப்பு அப்படியே தொடரலாம். கூடுதலாக, புதிய 7 சீட்டருக்காக டாடா புதிய அலாய் வீல் வடிவமைப்புகள், பிரத்யேக வண்ண ஆப்ஷன்கள் மற்றும் தனித்துவமான பேட்ஜிங்குகள் வழங்கப்படலாம்.

டாடா சியாரா 7 சீட்டர் - அம்சங்கள், வசதிகள்

உட்புறத்தை கருத்தில் கொண்டால், தற்போது விற்பனையில் உள்ள 5 சீட்டரிலிருந்து புதிய 7 சீட்டர் மிகப்பெரிய தாக்கத்தை பெறக்கூடும். அதன்படி இன்ஃபோடெயின்மென்ட்டிற்காக 12.3-இன்ச் இரட்டை ஸ்க்ரீன் மற்றும் ஓட்டுநருக்கான 10.25-இன்ச் டிஸ்பிளே என மூன்று ஸ்க்ரீன் செட்-அப் அப்படியே தொடரலாம். இதுபோக பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்ட வசதி மற்றும் பவர் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ப்ரீமியம் JBL ஆடியோ சிஸ்டம் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வேரியண்ட்டைப் பொறுத்து, சஃபாரியைப் போலவே நடு வரிசைக்கு கேப்டன் இருக்கைகளும் வழங்கப்படலாம். இது வாடிக்கையாளர்களுக்கு 6-சீட் மற்றும் 7-சீட் உள்ளமைப்புகளை வழங்கும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டாடா சியரா ஏற்கனவே 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் 7-சீட்டரும், லெவல்-2 ADAS, பல ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் சிறப்பான செயல்பாட்டை வழங்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Budget 7 Seater: ரு.20 லட்சம் பட்ஜெட்..! இந்தியாவில் கிடைக்கும் டயங்கரமான 7 சீட்டர்கள் - மைலேஜ், அம்சங்கள், ரேட்டிங்

டாடா சியாரா 7 சீட்டர் - இன்ஜின் விவரங்கள்

புதிய 7-சீட்டர் மாடலில் சியராவுடன் அறிமுகமான புதிய 1.5-லிட்டர் TGDi பெட்ரோல் இன்ஜின் (158 bhp & 255 Nm) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் (104 bhp & 145 Nm) இடம்பெறலாம். 7 சீட்டர் பெரிய வாகனம் என்பதால், ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் உள்ள 2.0-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் (170 bhp & 350 Nm) SUV-யில் இடம்பெறலாம்.

டாடா சியாரா 7 சீட்டர் - போட்டியாளர்கள், விலை

சியாரா 7 சீட்டர் உள்நாட்டில் விற்பனைக்கு வந்தால், மஹிந்திரா XUV 7XO, ஹுண்டாய் அல்கசார் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற கார்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும். இதுபோக ரெனால்ட் டஸ்டரை அடிப்படையாகக் கொண்ட 7-சீட்டரான பிக்ஸ்டர் போன்ற கார் மாடலும் அடுத்தடுத்து விற்பனைக்கு வரவுள்ளது நினைவுகூறத்தக்கது. வெளியீடு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாவிட்டாலும், 2027-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. போட்டி நிறைந்த பிரிவு மற்றும் இந்த 7-சீட்டரில் வழங்கப்படும் அம்சங்களையும் கருத்தில் கொண்டால், சியரா அடிப்படையிலான 7-சீட்டரின் விலை ரூ. 18 லட்சத்தில் தொடங்கி ரூ. 25 லட்சம் வரை நீளக்கூடும்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology