PulseNews
தொழில்நுட்பம்

7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ

Japanese 7 Seater SUV: நிசான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி குறித்த விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஜப்பான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதில், ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிறுவனம் அண்மையில் தான் டெக்டான் மாடலை உள்ளூரில் விற்பனைக்கு கொண்டு வந்தது. அதன் நீட்சியாக பல மாடல்களை இறக்கவும் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, புதிய எஸ்யுவி ஒன்றை 2027ம் ஆண்டின் நடுப்பகுதியில் சந்தைப்படுத்த ஜப்பான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இது டெக்டான் அடிப்படையிலான 7 சீட்டராக இருக்கும் எனவும், அதேநேரம் டெக்டானில் இல்லாத ஒரு அம்சம் புதிய காரில் இருக்கும் எனவு கூறப்படுகிறது.

7 சீட்டரில் ஹைப்ரிட் வசதி

ரெனால்ட் நிறுவனமானது டஸ்டர் அடிப்படையிலான 7 சீட்டர் எஸ்யுவியை இந்தியாவிற்கு கொண்டுவர பணியாற்றி வருகிறது. இதன் இணை நிறுவனமான நிசானும் அதே திட்டத்தில் தான் குதித்துள்ளது. அதாவது டெக்டான் அடிப்படையிலான 7 சீட்டர் எஸ்யுவியை விரைவிலேயே சாலையில் பார்க்க முடியும். ரெனால்ட் டஸ்டரில் ஹைப்ர்டி பவர்ட்ரெயின் ஆப்ஷன் இருக்கும் நிலையில், டெக்டானில் அந்த வசதி இல்லை. உள்ளூரில் ஹைப்ரிட் மற்றும் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடல்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதில் பின் தங்கி இருப்பது நிசானிற்கு பெரும் இழப்பாக அமையலாம்.

ஆனால் சர்வதேச சந்தையில் நிசான் நிறுவனம் ஏற்கனவே இ-பவர் டெக் எனப்படும் வலுவான ஹைப்ரிட் ஆப்ஷனை கொண்டுள்ளது. நிசான் தனது காஷ்காய் எஸ்யுவியின் சாலை பரிசோதனையில் ஒரு லிட்டருக்கு சுமார் 36 கிலோ மீட்டர் என்ற மைலேஜை எட்டி உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.​ ​இந்தியாவில் உள்ள ப்ராண்டின் எந்த எஸ்யுவிக்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், விரைவில் இங்கு அறிமுகப்படுத்தப்படலாம். நிசான் தனது வரவிருக்கும் மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட எஸ்யுவியில் இந்தத் தொழில்நுட்பத்தைச் சேர்த்தால், அது சிறந்த மைலேஜை வழங்கும் ஒரு நல்ல தேர்வாக அமையும்.

20+KM மைலேஜில் 7 சீட்டர்:

காஷ்காய், இ-பவர் டெக்குடன் கூடிய 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது அந்த எஸ்யுவி கிட்டத்தட்ட லிட்டருக்கு சுமார் 36 கிலோ மீட்டர் என்ற மைலேஜை அடைய உதவியது. இதன் விளைவாக டெக்டானின் 7 சீட்டர் எடிஷனில் தனது புதிய தொழில்நுட்பத்தை நிசான் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அளவு மற்றும் எடை காரணமாக இந்த மைலேஜ் காஷ்காயின் மைலேஜுக்கு ஈடு கொடுக்காவிட்டாலும், ஒரு லிட்டருக்கு சுமார் 20 கிலோ மீட்டருக்கு மேல் மைலேஜ் எதிர்பார்க்கலாம். ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யுவிக்கு இந்த எரிபொருள் செயல்திறன் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

நிசான் 7 சீட்டர் - மற்ற அம்சங்கள் எப்படி?

நிசான் இதுவரை இந்தத் தயாரிப்பு குறித்து எந்த முக்கிய தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியே பகிரவில்லை. வடிவமைப்பைப் பொறுத்தவரை இது நிசானின் ஃப்ளாக்‌ஷீப் எஸ்யுவியான பேட்ரோலை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், டெக்டானில் இருந்து பலவும் இதற்கு அப்படியே கடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கக்ளஸ்டர், லெவல்-2 ADAS, 360-டிகிரி கேமரா, பவர் மற்றும் காற்றோட்ட வசதியுடன் கூடிய முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கும்.

இதையும் படியுங்கள்: Kia Hybrid: இனி எல்லாமே ஹைப்ரிட் தான்..! 5 எஸ்யுவிக்களை களமிறக்கும் கியா - லோ டூ ப்ரீமியம் பட்ஜெட் மாடல்கள்

நிசான் 7 சீட்டர் - விலை, வெளியீடு

​​நிசானின் புதிய 7 சீட்டர் எஸ்யுவியின் அறிமுகத்திற்கான தேதி ஏதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், 2027-ஆம் ஆண்டின் மத்தியில் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தக்கூடும் என்று அது சூசகமாகத் தெரிவித்துள்ளது. விலையைப் பொறுத்தவரை, இந்த எஸ்யுவியின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். விற்பனைக்கு வரும்போது மஹிந்த்ரா XUV 7XO, கியா காரென்ஸ் க்ளாவிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளூரில் நிலைநிறுத்தப்படும்

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
PulseNews சுருக்கம்

இந்திய வாகன சந்தையில் தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், ஜப்பானின் நிசான் நிறுவனம் புதிய 7 சீட்டர் எஸ்யுவி ரக காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே டெக்டான் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த புதிய காரையும் களமிறக்க அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த புதிய மாடல் 20 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இந்த கார் குறித்த விலை, அதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதர வசதிகள் தொடர்பான விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology